பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஆன்மீக ஞானிகள் : அன்னை அரவிந்தர்!

மாணவர்கள், பெண்கள் அறையை முற்றுகை யிட்டுக் கொண்டு, எந்த ஒரு பெண்ணையும் வீட்டுக்குப் போக விட மாட்டோம் என்று கூக்குரல் கொடுத்தார்கள்.

இதையெல்லாம் அரச குமாரி மீரா கம்பீரத்தோடவே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்; பயம் என்றால் என்ன என்பதையே அறியாத மீராவைப் பார்த்து மற்றப் பெண் களும், வாடி மீரா, ஏதாவது கலவரம் செய்யப் போகின்றார்கள் அந்தப், பொறுக்கிப் பையன்கள், வா வா என்று கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருந்தார்கள் மீராவை.

ஆனால் மீரா, மற்ற பெண்கள் மன்றாடிக் கேட்டதையும் மதியாமல், கைக் குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு, விர்ரென்று வெளியே நடந்து வந்தாள் அப்போது கலவரம் செய்து கொண்டிருந்த பையன்களைப் பார்த்து, வழி விடுங்கள், நான் போக வேண்டும் என்று சற்றுக் கோபத்துடன் நின்று சாவதான்மாகக் கூறினார்.

என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் அப்போது? எந்த விதக் கலாட்டாவும் இல்லாமல், ஓர் அரச குமாரிக்கு வழி விடும் காலாட் படைகளைப் போல, அல்லது புதிய ஓர் ஆளுநருக்கு மரியாதை செலுத்தும் ராணுவ அணி வரிசையைப் போல, ஒவ்வொரு குழு மாணவரணியினரும் ஒதுங்கி வழியை விட்டு ஓரம் கட்டிக் கொண்டு நின்று விட்டார்கள்.

எவனும் வாயைத் திறக்கவில்லை. இவர்களா கலாட்டா செய்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல், எல்லாரும் இரு அணியினர்களாக அணி வகுத்து பட்டாள வீரர்களைப் போல நின்று. வழி விட்டார்கள் - மீராவுக்கு:

மீரா ஓர் அரசகுமாரி அணி வகுப்புப் படைகளைப் பார்வையிட்டுச் செல்வதைப் போல, கம்பீரமாக, நேர் கொண்ட நோக்குடன், அமைதியாக அவர்களை இரண்டாகக் கிழித்துக் கொண்டு வரிசை நடுவே புகுந்து போவதைப் போல நடந்தார்:

தன்னுள் ஏதோ ஓர் அபூர்வ சத்தி இருப்பதைப் போல மீரா உணர்ந்து கொண்டார் என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். அதற்கேற்ப, இதோ ஓர் எடுத்துக் காட்டு.