பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்! இத்தகைய ஒர் அற்புத நகரத்தை அன்னை அவர்கள் அமைத்ததால், உலக நாடுகளும், அங்கங்கே உள்ள ஆன்மீகர் களும், அன்னை பெருமாட்டியை பாராட்டிக் கொண்டிருக் கிறார்கள்.

அரோவில் நகரை அமைத்த அன்னை, அங்கு வாழ்கின்ற ஆன்மீக ஞான வாழ்வுச் சாதகர்கள் இடையே ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அது இது.

அரோவில் பிரகடனம்

  • அரோவில் எந்த ஒரு சாதகருக்கும் சொந்தமானது அன்று. அது மனித இனம் அனைத்திற்கும் உரிமையானது. ஆனால், ஒருவன் அரோவில் நகரில் வசிக்க ஆசைப் பட்டால், அவன் இறைவனுக்குத் தொண்டனாக, தெய்வ உணர்வு வாழ்க்கைக் குப் பணி செய்பவனாக இருக்க வேண்டும. * அரோவில் முடிவில்லாத கல்விப் பயிற்சி, இடை விடாத முன்னேற்றம், மங்காத இளமை இவை களுக்குரிய இடமாகும். + அரோவில் இறந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடையே அமைக்கப்படும் பாலமாக இருக்க விரும்புகிறது. - இதுவரை சாதிக்கப்பட்டுள்ள மனிதனின் அகம், புறம், கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பயன் படுத்திக் கொண்டு, அரோவில் துணிச்சலுடன் புதிய எதிர்கால சித்திகளை நோக்கிப் பாய்ந்து செல்லும். ம் மனித ஒருமைப்பாட்டின் உயிருள்ள வடிவமாக இருப்பதற்கு ஏற்ற இடமாக அரோவில் இருக்கும்.

அரோவில் நோக்கம்

அரோவில் நோக்கம் என்ன என்பதை அன்னை அவர்கள், மற்றோர் இடத்தில் இவ்வாறு விளக்கியுள்ளார்.