பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 ஆன்மீக ஞானிகள் : அன்னை அரவிந்தர்!

அதற்கு அரவிந்தர், நான் துப்பாக்கியைத் தொட்டதுகூட இல்லையே, எனக்கென்ன தெரியும்? என்றார்.

அந்த வாலிபர்கள் அரவிந்தரை விடவில்லை; துப்பாக்கியை அவரிடம் அவர்கள் கொடுத்தார்கள். குறி பார்த்துச் சுடுவது எப்படி என்பதை அவருக்கு விளக்கினார்கள்.

துப்பாக்கியை அரவிந்தர் கையில் ஏந்தினார். முதல் முறையே, குறி தவறாமல் குண்டு பாய்ந்தது. எல்லாரும் அரவிந்தர் சுட்டதைக் கண்டு பிரமித்தார்கள்.

தொடர்ந்து அவர் துப்பாக்கி வேட்டையாடுபவனைப் போல, சுட்டுக் கொண்டே இருந்தார்! வியப்பு மேல் வியப்பு அனைவரிடமும் உண்டானது.

இதைக் கண்ட அந்த அரவிந்தரின் வீட்டுக்கார நண்பரான சாரூபாபு, "யோக சித்தி அரவிந்தரைப் போன்றவர்களுக்கு அல்லாமல் நமக்கா கிடைக்கும்?' என்றார்.

எல்லா நண்பர்களும், உண்மைதான்், அதுதான்் அரவிந்தர்

ஆற்றல்! அவர் சரியாகக் குறி பார்த்தார் குறி தவறவில்லை. இது தெய்வசக்தியின் ஒரு துளி என்றார்கள்.