பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #31

"எனது செயல்கள் வெற்றி பெறுவது இருக்கட்டும். நான் இன்னும் முழுமையாகக் காரியத்தில் இறங்கவே இல்லை; ஆகையால், என்னைப் பைத்தியக்காரன் என்றே எண்ணிக் G៩៣៩.*

என்றெல்லாம், அரவிந்தர் தனது அன்பு மனைவிக்கு எழுதிய கடிதத்தில் மிக விளக்கமாக வரைந்துள்ளார்:

அரவிந்தர் மற்றவர்களைப் போல் சாதாரணமானவரல்லர்: ஓர் அசாதாரணமான செயல்வீரர் என்று அவரை மக்கள் எண்ணுவதற்கு அப்படியென்ன அற்புதமான ஆற்றல் அவரிடம் இருந்தது என்று சிலர் கேட்பார்கள்! அதற்கு இதோ ஒர் எடுத்துக்காட்டு :

மும்பை மாநிலத்தில் டானா என்ற ஒரு நகரம் உள்ளது. அங்கே சாரூபாபு என்ற நண்பர் ஒருவர் இல்லத்தில் அரவிந்தர் தங்கியிருந்தார்.

ஒரு நாள் பேய் மழை போன்ற ஒரு பெருமழை பெய்தது. அப்போது அந்த பாபு வீட்டில் சில நண்பர்கள், மழை காரணமாக எங்கேயும் செல்ல முடியாமல் தவித்தார்கள். ஆனால், உள்ளே இருந்து கொண்டு என்ன செய்வது? கூடியிருந்த அந்த நண்பர்கள் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடுவது என்ற முடிவுக்கு வந்தார்கள். குறி பொருள் என்ன தெரியுமா? ஒரு நெருப்புப் பெட்டி?

அரவிந்த கோஷ் இவர்களது துப்பாக்கிச் சுடும் பயிற்சியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? அவருக்குத் துப்பாக்கி சுடத் தெரியாது என்பது மட்டுமன்று: அன்று வரை அவர் துப்பாக்கியைத் தொட்டுக் கூடப் பார்த்தவரல்லர் என்பதால், அந்த வாலிபர்களுடைய சுடும் ஆட்டத்தை அவர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால், அந்த வாலிபர்கள், கோஷ் சார் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் என்று அழைத்தார்கள்.