பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

8

ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

"எப்போதுமே அரு சின்னப் பையனாகவாக இருப்பான்? வயதான்ால் வளர மாட்டானா? இவன் அருதான்் என்று அந்த அம்மையாரின் உறவினர்கள் அனைவரும் அவளிடம் கூறினார்கள்.

அப்படியா? என் அருவா இவன்? அப்படியானல் அவன் குழந்தையாக இருந்தபோது விரலைக் கண்ணாடித் துண்டால் அறுத்துக் கொண்டானே அந்த வடு சிலுவைப் போல் தழும்பாக இருக்குமே! இப்போது அந்தக் காயத்தின் வடு இருக்கிறதா? ஏய், அரு நான் பார்க்கலாமா அதை? எங்கே காட்டு விரலை? என்று விரலைத் தடவிப் பார்த்தாள் சொர்ணலதா தேவி.

அவள் குறிப்பிட்ட அந்த வடு, அரவிந்தகோஷின் கை விரலிலே இருந்ததைப் பார்த்த தாய், ஆமாம் - இவன் என் மகன் அருவேதான்், அருவேதான்் என்று அனைத்து அழுதாள் அம்மா! அரு, எவ்வளவு பெரியவனாக வளர்ந்து விட்டாயடா! நீ பெரிய புலவனாகி விட்டாயாமே! அரு, இலண்டனில் இருந்து எப்போதட வந்தாய்? என்றெல்லாம் கேட்டபடியே மகனை ஆரத் தழுவிக் கொண்டாள்.

இந்த மன உணர்ச்சி வெள்ளத்தில் அரவிந்தகோஷ் சிக்கி, தனது தாய்க்கு வந்த நிலையும் தன்னால்தான்ே வந்தது என்று அவர் கண்ணி சிந்தினார்.

பெண்களைக் கண்டாலே கூச்சப்படும் நாண முடைய அரவிந்தகோஷ், தனது தாயின் அன்பு ஆவேசம் அவரை மேலும் நாணச் சிக்கிலிலே நடுங்க வைத்தது.

தாத்தா ரிஷிராஜ நாராயனார் அரவிந்தகோஷ் வந்திருப் பதைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்தார். தனது பெண்வழிப் பேரனைப் பார்த்து மகிழ்ந்து அவர் பரவசப்பட்டார். பேரனைத் தனது மடியில் அமர வைத்துக் கொண்டு பார்த்துப் பார்த்து ரசித்தார் தாத்தா

அரவிந்தக் கோஷ் தனது அம்மாவுடன் சில நாட்கள் தங்கி யிருந்து விட்டு, பின்பு பரோடா மன்னரைப் பார்க்கப் புறப்பட்டார்.