பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

'பரோடாவில் வெப்பமும் அதிகம். குளிரும் அதிகம் தான்். ஆனால், மாசி மாதக் குளிரில்கூட, அரவிந்தர் மெத்தை மேல் படுத்ததை யாரும் பார்த்ததில்லை. சாதாரணக் கம்பளி தான்் அவரது படுக்கை'.

‘ஐந்தாறு ரூபாய் மதிப்புள்ள ஒரு பைக் கடிகாரத்தை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். படிக்கும் மேசை மீது ஒரு சிறு டைம் பீஸ் கடிகாரம் இருக்கும்.

இரவு நேரமானால் ஓர் எண்ணெய் விளக்கு முன்பு அமர்ந்து படிக்க ஆரம்பித்து விடுவார். கொசுக்கடி அவரது கல்விக் கவனத்தைச் சிதறடிக்காது. படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பார்.

"மணிக் கணக்கில் இவ்வாறாக அவர் இருக்கும்போது, யோகத்தில் ஆழ்ந்து விட்ட முனிவரோ, யோகியோ என்று பார்ப் பவர்கள் நினைத்துக் கொள்வார்கள். வெளியே என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே அவர் அமைதியாக யோகப் படிப்பில் ஆழ்ந்து விடுவார்.

அரவிந்தர் பரோடாவில் சிறுகூரை வேய்ந்த வீட்டில் குடியிருந்தார். வீடு அறை முழுவதும் புத்தகங்கள் குவிந்த படியே இருக்கும். மாதந்தோறும் இலண்டன் நகரிலே இருந்து புத்தகப் பார்சல் பெட்டிகள் தவறாமல் வந்து கொண்டே இருக்கும். அதுபோலவே அவரது சம்பளப் பணமும் இலண்டன் வியாபாரி களுக்குப் போய்க் கொண்டே இருக்கும்.

அவரது வீடு சுத்தமாகவே இருக்காது. புத்தகக் குவியலோடு புழுதியும் தூசும் நிறைந்து காணப்படும். மழைக் காலம் வந்தால் தரை ஒரே சொதசொதப்பாக ஒதம் படிந்து கொண்டே இருக்கும்.

இந்த வீட்டுக்கு வாடகையோ அதிகம். அதனால் அவர் எதையும் பொருட்படுத்தாமல், வேலையுண்டு தான்ுண்டு சம்பள முண்டு புத்தகங்கள் வருவதுண்டு, எண்ணெய் விளக்குண்டு; அதன் எதிரே புத்தகத்தோடு உட்கார்ந்து படிப்பதுண்டு, கிடைத்த