பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வலை விரிக்கும் கவலை தெரியாத மனதுக்குள்ளே திரிந்தாடும் நினைவுகள் தான் "திரிலோக சிந்தனைகளைத் தந்து விடுகின்றன. சில சமயங் களில் திரிசங்கு சொர்க்கத்திலே கொண்டு போய் உட்கார வைத்து விடுகின்றன. இன்னும் சில சமயங்களில் திண்ணே யோரத்து சோம்பேறியாகவும், தெருவில் திரியும் பராரியாகவும் மாற்றி வைத்து விடுகின்றன. புழுக்கமான நேரத்தில் அவ்வப்போது வந்து போகும் புமலர் , தென்றலாக, சதா சங்கடப்படும் மனதுக்கு சில சில இ. பமான நிகழ்ச்சிகள், நினைவுகள் வந்து வந்து போகும். ஆல்ை காலம் முழுவதும் நம்மைக் கவ்விக் குதிரையேறிக் கொண்டும். குறுக்கு ஏர் ஒட்டி க் கொண்டும் கூடவே இருப் பது இந்தக் கவலைகள் தான். ஏன் தெரியுமா ? கவலை என்பது ஒரு மாயவலை, அதில் மாட்டாத ஜீவராசிகளே கிடையாது எனலாம். அதிலிருந்து மீண்டு வெளிப்பட்டு வருவது ஒரு ஒப்பற்றக் கல. அl - க் கலயைத் தான் நாம் கற்றுக் கொள்ள இருக்கிருேம்.