பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T பாட்டு இங்குள்ள ஐந்துக்களிலே மனிதருக்கும் பறவைகளுக் குந்தான் பாடத் தெரியும். மற்ற மிருகங்களுக்குப் பாட்டு வராது. பறவைகள் வானத்திலே பறக்கும் வழக்கமிருப்ப தால், அவற்றின் மன நிலை ஸங்கீதத்திற்கு இசைகின்றது போலும்! மனிதன் உடம்பினலே பறக்காவிட்டாலும், உள்ளத்தைத் திசை வெளியிலே பறக்கும்படி செய்கிருன். அப்போது, இயற்கையிலேயே பாட்டுத் தோன்றுகிறது. ரளங்கள் ஒன்பது: (1) (2) (3) (4) (5) (6) (7) (8) வீரம், ரெளத்திரம் (கோபம்), அத்புதம் (வியப்பு), சாந்தம் (நடுவுநிலை), பயாநகம் (அச்சம்), பீபத்ளம் (வெறுப்பு), ஹாஸ்யம் (நகை), கருணை, சோகம் (துயரம்): இதை அவலம்' என்பது பழைய தமிழ் வழக்கு. (9) சிருங்காரம் (காமம்). வெளிப்பொருள்களைக் காணும்போது அல்லது நினைக் கும்போது மனிதனுடைய உள்ளத்திலே இந்த ஒன்பது சுவுைகளில் ஏதேனும் ஒன்று தோன்றும். இரண்டு மூன்று