பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளானவன்

ಛಿ। தொண்டர்களில் எத்தனை ←a Jöy ᎼᎦ எவ்வளவோ காலமாக அவனுடைய திரு வருளே வேண்டி அன்பு செய்யும் தொண்டர்கள் அங்கங்கே இருந்தார்கள்; இருக்கிருரர்கள்; இன்னும் இருப்பார்கள். அ. வர் க ளே க் கணக்கெடுக்க முடியுமா? அந்த அன்பர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் வழிபட்டாலும் எல்லோருக்கும் இலக்காக இருப்பவன் இறைவன் ஒருவனேதான்.

இறைவனுடைய புகழைப் பாட்டினுற் சொல்வ தில் தனி இன்பம் இருக்கிறது. பாட்டு மனத்தைக் குவிய வைப்பது; சிதறிய நினைவுகளிலே செல்லும் மனத்தை உருட்டித் திரட்டிப் பக்தி உணர்ச்சியை ஊட்டி இன்புறவைப்பது. சிதறிப் பறக்கும் பஞ்சை வேகத்தால் நூலாக்கினுல் அது ஒர் ஒழுங்கான உருவம் பெறுவதோடு ஒரு பொருளைக் கட்டும் உறுதி யுடையதாகிறது. மனமும் அத்தகையதுதான். பக்தி என்னும் வேகத்தால் முறுக்கு ஏறினல் மனம் சிதரு மல் ஒருமுகப்பட்டு இறைவனேயே கட்டி அகப்படுக்க தும் உறுதியைப் பெற்றுவிடுகிறது. அதற்கு இறைவன் புகழை இசையுடன் பாடுவது சிறந்த வழி.

இந்தத் தந்திரத்தை அறிந்தே பக்தர்கள்கூடிப் பாடுகிருரர்கள். தனியே இருந்தும் பாடுகிருர்கள், இறைவனே பொருள், பிற யாவும் போற்றுதற் குரி யன அல்ல என்ற உள்ளத்தோடு அவர்கள் இறை வன் புகழை இசையில் அமைத்துப் பாடுகிறர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/77&oldid=597037" இலிருந்து மீள்விக்கப்பட்டது