பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பிறகு நாட்டியத்தைப்பற்றிக் கொஞ்சம் ஸம்பாஷணை நடந்தது. ஸங்கீதத்தில் நம்மவர் தற்காலத்தில் சோக ரஸம், சிங்கார ரஸம் என்ற இரண்டுமாத்திரம் வைத்துக் கொண்டு மற்ற ஏழையும் மறந்து போய்விட்டது போல, நாட்டியத்திலும் சோகம் சிங்காரம் இரண்டு தான் வைத் திருக்கிருர்கள். மற்ற ஏழும் ஏறக்குறைய கிருஷ்ணுர்ப் பணம் என்று பல விதமாகப் பேசினர். "நாட்டியம் மிகவும் மேலான தொழில். இப்போது அந்தத் தொழிலை நமது நாட்டில் தாளிகள் மாத்திரமே செய்கிருர்கள். முற் காலத்தில் அரசர் ஆடுவதுண்டு. பக்தர் ஆடுவது லோகப் ப்ரஸித்தம். கண்ணன் பாம்பின்மேலும், சிவன் சிற்சபை யிலும் ஆடுதல் கண்டோம். கணபதி, முருகன். சக்தி முதலிய தெய்வங்களுக்கெல்லாம் தனித்தனியே பிரத்தி யேகமான கூத்து வகைகள் சாஸ்த்ரங்களிலே சொல்லப் பட்டிருக்கின்றன. கவலையை வெல்லுதல் குறி. கவலை நீங்கினல் ஆட்டமும் பாட்டமும் இயற்கையிலே பிறக்கும். பூர்வீக ராஜாக்கள் அனுபவித்த சுகமும் அடைந்த மேன்மையும் இக்காலத்தில் இல்லை. ராஜ யோகியானல் அவனுக்கு நாட்டியம் முதலிய தெய்வ கலைகள் இயற்கை யிலே சித்தியாகும்.” இங்ங்ணம் பிரம்மராய ஐயர் பேசிக்கொண்டிருக் கையில் அவ்விடத்துக்கு மேல்படி கோயில் தர்மகர்த்தா வாகிய வீரப்ப முதலியாரும் வந்து சேர்ந்தார். வீரப்ப முதலியார் நல்ல தீரன்; பல பெரிய கார்யங்களை எடுத்து ஸாதித்தவர். இவருடைய குமாரன் மஹா வீரனென்று போர்க்களத்தில் கீர்த்தி யடைந்திருக்கிருன். இவர் வந்தவுடனே ஸம்பாஷணை கொஞ்சம் மாறுபட்டது. ஏதேதோ விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கோவில் பணிவிடைக்காரன் ஒருவன் கையிலே மஞ்சள் காயிதங்கள் கொண்டு வந்து ஆளுக்கொன்று வீதம்