பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

(இ) ரஸாயன சேர்க்கை, பிரிவு இவற்றின் இயல்புகள் (பரீகைடிகளின் மூலமாக விளக்குக): இவற்றின் விதிகள்.

(ஈ) ரேடியம், ஹெலியம் முதலிய புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட மூல பதார்த்தங்களின் அற்புத குணங்கள்.

(உ) பரமானுக்கள், அணுக்கள், அணுக்கணங்கள்இவற்றின் இயல்பு. குணங்கள், செய்கைகள் முதலியன.

இவைபோன்ற பொது அம்சங்களைப்பற்றிய முக்கிய மான செய்திகளை, ஸ்ாதாரண லம்பாஷணை நடையில் உபாத்தியாயர்கள் வீட்டில் எழுதிக்கொண்டு வந்து பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டி அவர்களை எழுதி வைத்துக்கொள்ளும்படி செய்யவேண்டும்.

இயற்கைநூல் (பிஸிக்ஸ்), ரஸாயனம் (கெமிஸ்ட்ரி), சரீர சாஸ்த்ரம், ஐந்து சாஸ்த்ரம், செடிநூல் (தாவர சாஸ்த்ரம்)-இவையே முக்கியமாக போதிக்க வேண்டி யனவாம்.

ஏ) கைத்தொழில், விவலாயம், தோட்டப் பயிற்சி,

தமதா, த @

வியாபாரம்

இயன்றவரை மாணக்கர்கள் எல்லாருக்கும், விசேஷ மாகத் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு, நெசவு முதலிய முக்கியமான கைத்தொழில்களிலும், நன்செய் புன்செய்ப் பயிர்த்தொழில்களிலும், பூ, கனி காய், கிழங்குகள் விளை விக்கும் தோட்டத் தொழில்களிலும், சிறு வியாபாரங் களிலும் தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படி செய்தல் நன்று. இதற்கு, மேற்கூறிய மூன்று உபாத்தியா யர்களைத்தவிர, தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயி களிலே சற்றுப் படிப்புத் தெரிந்தவர்களும் தக்க லெளகி