பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

ஒடையாமற் போகும். இன்று செய்யக்கூடிய கா. த்தை நாளேக்குச் செய்லாமென்று தாமஸப்படுத்தி வைப்.தனல், அந்தக்கார்யம் பலமான சேதமடைந்துபோகும். எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும்போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் துரங்கப் போட்டுவிட்ட பிறகு செய்யப்போனல், அதில் ஆரம்பத்தில் இருந்த ரஸம் குறைந்து போகும். அதற்குத் தக்கபடி பயனும் குறைவெய்தும்.

‘இத்தகைய மூட பக்திகளெல்லாம் படிப்பில்லாமை யால் ஏற்பட்டிருக்கின்றன என்றும், ஜனங்களுக்குப் படிப்புக் கற்றுக்கொடுத்தால் இவை அழிந்து போய்விடும்’ என்றும் இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். நானும் ஒருவாறு அது மெய்யென்றே நம்புகிறேன். ஆல்ை, அதற்குத் தற்காலத்தில் நமது தேசத்துப் படசாலைகளில் பயிற்றுவிக்கப்படும் இங்கிலீஷ் படிப்பு, சுத்தமாகப் பிரயோஜனமில்லை என்பது ஸ்பஷ்ட மாக விளங்குகிறது. சென்ற நூறு வருஷங்களாக இந் நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடந்துவருகிறது. ஆயிரக் கணக்கான படசாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் லக்ஷக்கணக்கான-கோடிக்கணக்கான ஜனங்கள் படித்துத் தேறியிருக்கிறார்கள். இவர்கள் மூடபக்திகளை எல்லாம் விட்டு விலகி நிற்கிறார்களா? இல்லை. நமது தேசத்தில் முப்பத்துமூன்று கோடி ஜனங்கள் இருக்கிறார்கள். இத்தனை ஜனங்களுக்கும் ஒருவர் மிச்சமில்லாமல் உயர்தரக் கல்வி கற்றுக் கொடுத்த பின்புதான் மேற்கூறிய சாமான்ய மூட பக்திகள் விலக வேண்டுமென்பது அவசியமில்லை. ஏற்கனவே, இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துத் தேறி யவர்கள் இந்த விஷயத்தில் தமது மனச்சாகதிப்படி யோக்யமாக நடந்து வந்திருப்பார்களானல், மற்றவர்