பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுரை டாக்டர் எஸ். இராமனுதன். Ph.D. (Wesleyan) புரொபசர்: கலாக்ஷேத்ரா-சென்னை-600 041.

  • அள்ளி உண்டிடலாம் வாரீர் - எல்லோரும் தெள்ளமுதாகிய செந்தமிழ்த் தேனை”

என்ற அருமையான பாடலை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கேட்டேன், அதை இயற்றிய நண்பர் கலைமாமணி, கவிஞர், கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களை நீண்ட காலமாக அறிவேன். அவர் இயற்றிய அநேக பாடல்களே வானெலி யிலும், பிற இசையரங்குகளிலும் கேட்டு மகிழ்ந்திருக் கிறேன். இப்போது அவரது நூறு பாக்கள் சுரதாளக் குறிப் புடன், நூல்வடிவில் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. - அருட்பா இசையரசி, கலைமாமணி குருவாயூர் பொன்னம்மாள் இவற்றிற்குச் சிறந்த முறையில் இசை வடிவம் தந்திருக்கிரு.ர். பழமையான ரீதி கெளள, கேதார கெளள, பந்துவராளி, சங்கராபரணம், போன்ற இராகங் களையும், சுநாத விநோதினி, சந்திரஹசிதம் போன்ற நவீன இராகங்களையும், பயன்படுத்தியுள்ளார். “ஞான தேசிகன்’ "(நவரசக் கன்னடா)', 'அறுமாமுகன்’ (பூர்வ கல்யாணி) 'சங்கரன் பங்கினில்' (சரசாங்கி) ஆகிய பாடல்களின் இசையமைப்பு குறிப்பிடத்தக்கதாய் உள்ளது. பொதுமுறை இறைவழிபாட்டிற்குரிய பாடல்கள் சிலவும், விநாயகர், கலைமகள், சிவன், திருமால் போன்ற தெய்வங்கள் மீது பாடப்பெற்றவை சிலவும், இராம கிருஷ்ணர், சாரதாமணி தேவியார், பாரதி, இராமலிங்கர், போன்ற சான்ருேர்கள் மீதுள்ள சிலவும், உள்ளன.கண்ணகி - தேவி மீது இயற்றப்பட்ட பாடல் குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதத்_தமிழிசை_.pdf/8&oldid=737214" இலிருந்து மீள்விக்கப்பட்டது