பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33



சிந்தாமணி கூடத்தில் இருந்தவாறு வாசற்புரம் கண் பார்வையைத் திருப்பி விட்டாள். மாமல்லன் அலுவலகத் துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். கையில் புது பைல்” ஒன்று இருந்தது. அவசரம்’ என்று சிவப்பு மையில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது. அவனும் அவசர அவசரமாகத்தான் புறப்பட்டுச் சென்றான்.


மாமல்லன் பலகாரம் சாப்பிட்ட வெள்ளித் தட்டைக் கழுவ முற்றத்துக்குக் குழாயடிக்கு வந்தாள் சிந்தாமணி. “எச்சில் தட்டையெல்லாம் நீ கையாலேகூடத் தொடக் கூடாது சிந்தாமணி’ என்று எச்சரித்தாள். எச்சில் தட்டை அவளே வாங்கிக் கொண்டாள். கழுவிச் சுத்தம் செய்தாள். எச்சிலின் வாத்ஸல்யத்தைத் தாய்தான் பரிபூரணமாக உணர முடியும்.


சிந்தாமணி ஆடாமல் அசையாமல் நின்றாள்.


‘'நீ போய்ச் சாப்பிடம்மா...”


‘நீங்க.”


“நான் அப்புறம் சாப்பிடறேன். முதலிலே நான் மல்லிகேஸ்வரர் கோயில் வரைக்கும் போயிட்டு வரணும் நீ சாப்பிடு சிந்தாமணி. சாப்பிட்டானதும், பருப்பை அவியவை. உலை வைக்கறதுக்கு ஏற்பாடு செய்...! என்று சொன்னாள். பூஜைக் கூடையை எடுத்துக் கொண்டு இளம்பினாள் கோசலை.


அப்பொழுது சித்தாமணி நிம்மதியடைந்தாள். அங்கு வந்த இத்தனை நாட்களாகக் கிடைக்காத தனிமை இப்போது அவளுக்குக் கிடைத்தது. வெளித் தாழ்வாரக் கதவை உட்பக்கமாகத் தாளிட்டாள். இரண்டாங்கட்டை அடுத்திருந்த சிறிய அறையில் காணப்பட்ட கள்ளிப் பெட்டி ஒன்றைக் கூடத்துக்கு எடுத்து வந்தாள். துணிமணிகள் சில கசங்கிக் கிடந்தன. பழைய வில்லை ஒன்றும் கண்ணில் பட்டது. “அப்பா !” என்று விம்மினாள். உடல் பூராவும்


அ-3