இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
x தெரிந்துகொள்ள வேண்டும்; கல்வியறிவு உள்ளவர் யாவரும் தெரிந்துகொள்ள முயலவேண்டும். அங்ங்னம் முயல் பவர்களுக்கு ஓரளவு உதவியளிக்கத்தக்க முறையில் இந்த “ஆரம்ப அரசியல் நூல்” எழுதப்பெற்றுள்ளது. எயிட்ஜு விக், லாஸ்கி, மாக்கைவர், கெட்டல், ரத்னலாமி, ஆசீர் வாதம் முதலிய சிறந்த அரசியல் சாஸ்திர ஆசிரியர்களின் நூல்களிலிருந்து பல அரிய கருத்துக்களும் செய்திகளும் இப் புத்தகத்தில் அடங்கியுள்ளன. - இதன்த் தங்கள் சங்கப் பிரசுரமாக வெளியிட்டுதவிய சென்னைப் புத்தகாலயப் பிரசார சங்கத்தினர்பால் மிக்க நன்றி பாராட்டுகிருேம். - . - ஆசிரியர்கள். இவ்விரண்டாம் பதிப்பில் சில அச்சுப் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. வேறு மாறுபாடுகள் இல்லை. - - ந. ரா. சு.