பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
99



அப்பாடல் பின் வருமாறு:

கனவல் இடபத்தர் கோடீச் சுரம்.அன்ன கன்னிநுதல்
இனவண் மணிக்குழை மாமுலே பார்வை எனவுரைக்கும்
தனுவும் மகரமும் கும்பமும் மீனமும் சார்ந்தங்கு நீ

முனமுற நோக்கிடின் அன்பஇவ் வாறு மொழியலையே.

இதில் கூறப்பட்ட ராசிகளின் அமைப்போடு பொருந்த “கனவல் இடபத்தர்” என்றவிடத்து இடபம் எனும் ஒரிராசிப் பெயர் தொனிக்கக் கூறியமையும் காணலாம்.

செ. 123ல் “கைவில், காலுறு கற்கட கச்சிங்க மேய்ந்தக் கன்னியுன்றன், பாலுறச் செய்வேன் இராசியமாக” என்ற பகுதியில் தனு, கடகம், சிங்கம், கன்னி எனும் நான்கு ராசிகளின் பெயர்கள் அமைந்துள்ளன. இராசியமாக-இரகசியமாக என்ற விடத்து இராசி என்னும் பெயரும் தொனிக்கின்றது.

செய்யுள் 137லும் 190லும் சில நட்சத்திரங்களின் பெயர்கள் தொனித்தலைக் காணலாம். “ஓணத்தவன் போற்றவிட் டத்தன் கேட்டையுறான்:” என்ற அடியில் ஒனம் அவிட்டம் கேட்டை என்ற நட்சத்திரங்கள் பெயர்கள் தொனிக்கின்றன (ஒனத்தவன்-திருமால்: போற்ற-போற்றுதலால், இட்டத் தன்-விருப்பமுடைய சிவன், கேட்டையுருன் - ஆழியான்). “வெண்பொடி பூசத்தர் ஆதிரையார் மகம் மேலழித்தோர், பெண்புனர் அத்தத்தர்” என்ற 190-ம் செய்யுளில் பூசம், ஆதிரை, மகம், அத்தம் என்பவை தொனியில் வந்துள்ளன.

ஐந்திலக்கணத்தின் பெயரும் செ 117ல் தொனிக்கின்ற மை, “எழுத்து இசை யாதுமுன் சொற் பொருள் கொள்ளாது யாப்பணியின் விழுத்தக ஓதி முடியா இப்பேதை” என்ற வரிகளில் காணலாம். சொல்முன் எழுத்து இசையாது-இவளுடைய சொல்லானது முதலில் எழுத்து வடிவம் பெற்றதன்று என்றது குதலையை; சொல்பொருள் கொள்ளாது-சொல் சரியான பொருள் கொள்ளாது; யாப்பு அணியின் ஓதி முடியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/106&oldid=1389157" இலிருந்து மீள்விக்கப்பட்டது