பக்கம்:அறுந்த தந்தி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 அறுந்த தந்தி இதைச் சொன்னபோது அவள் தொண்டையில் துக்கம் அடைத்தது; கண்கள் நீரைக் கக்கின. சீதாலக்ஷ்மி குதித்துக்கொண்டு ஓடினாள், கைகால் அலம்பிக் குங்குமம் வைத்துக்கொண்டு ஸ்வாமிடத்துக்கு முன் போய்ப் புஷ்பம் ஒன்றைப் போட்டு நடமஸ்காரம் செய்து விட்டு வால்மீகி ராமாயணத்துக்கும் அர்ச்சகர செய்து, பயபக்தியோடு மனசில், பகவானே, என் அபீஷ்டம் நிறைவே வேணும்!" என்ற பிரார்த்தனையோடு புத்தகத் தைப் பிரித்தாள். விசாலம் கண்கொட்டாமல் அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தாள், "அம்மா, அப்பாவுக்குப் பிரியமான இடமல்லவா வந்திருக்கிறது? பகவான் அநுக்கிரகம் செய்துவிட்டார். அப்பா அடிக்கடி சொல்லும் சுலோகமே இருக்கிறது. அவ ருடைய ஆத்மாவுக்குக்கூட இது திருப்தி தான் என்று குதூகலத்தோடு சொல்லிவிட்டு அந்தச் சுலோகத்தை வாசித்தாள் சீதாவாக்தமி. குழந்தை ஜயித்தாள். அன்று மாலை கார்த்திகை விளக் குகளுக்கு நடுவே புதுச்சேரி வெள்ளிக் குத்துவிளக்கு ஈடு நாயகமாக இருக்கப்போகிறது ! சீதாலக்ஷ்மிக்குத் தலைகால் தெரியவில்லை. மத்தியான்னம் சாப்பிட்டது முதலே அம்மா விடம் சொல்லிப் பெட்டியைத் திறக்கச் செய்து அந்தக் குத்துவிளக்கை எடுத்தாள், தேய்த்து வைத்து அழகு பார்த்தாள். எடுத்து எடுத்துக் கட்டிக்கொண்டாள். பல காலமாக அவளுடைய ஆசை தடைப்பட்டு அன்று விடு தலை பெற்றமையால் அந்த விளக்கின் மேல் இருந்த ஆசை யும் மதிப்பும் ஆயிரமடங்கு பெருகிக் கொந்தளித்தன. புதிய ஆடைகளை உடுத்துக்கொண்டாள். அலங் காரம் பண்ணிக்கொண்டாள், லக்ஷ்மி 'ஸஹஸ்ரநாமத்தை எடுத்து வைத்தாள். அவளுக்குத்தான் அப்போது நன்றாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/83&oldid=1278230" இலிருந்து மீள்விக்கப்பட்டது