பக்கம்:அறுந்த தந்தி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகை விளக்கு 77

ம்ைஸ்கிருதம் தெரியுமே. விசாலம் கார்த்திகைப் பகrணம் செய்வதில் ஈடுபட்டிருந்தாள். அப்பம், பொரியுருண்டை எல்லாம் செய்தாள். அதுவரையில் அவள் வெறுத்திருந்த குத்துவிளக்கை ஏற்றுவதில் அவளுக்கு அாைச் சம்மதமாக இருந்தாலும் தன் அருமைக் குழந்தை அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து பூரிப்பதைக் கண்டு அக்த வெறுப்பை ஒருவாறு மறந்தாள்.

சாயங்கால நோம் ; விளக்கேற்ற ஆரம்பித்துவிட்டார் கள். சீதாலக்ஷ்மி பாடிக்கொண்டே அந்த வெள்ளிக் குத்து விளக்கை ஏற்றினுள். அவள் முகத்தில்தான் என்ன ஒளி; என்ன குது கலம்! மற்ற விளக்குகளையும் ஏற்றி ஸ்வா மிக்கு நைவேத்தியம் செய்துவிட்டு அந்த விளக்குகளே விடு முழுவதும் அலங்காாமாக வைத்தாள்.

அவள் செய்ததையெல்லாம் கண் குளிரப் பார்த்து ஆனந்தமடைந்தாள் விசாலம். 'அம்மா, இனிமேல் ஸ்ஹஸ்ரநாமம் ஆரம்பிக்கிறேன். வாத்தியார் எதற்கு? நான் செய்கிறேன்’ என்று சொல்லி ஸ்வாமிக்கு முன் அமர்ந்து ஸஹஸ்ரனாமப் புத்தகத்தை வைத்துக்கொண்டு அந்தத் தீபத்துக்கு அர்ச்சனை செய்யத் தொடங்கினுள். விசாலம் அருகில் உட்கார்ந்துகொண்டு கவனித்து வந்தாள். அவளுக்குப் பழைய ஞாபகங்களெல்லாம் அப்போது ஒன்றன்பின் ஒன்ருது வந்தன: "விசாலம், இந்த விளக்கு லசஷ்மீகரம் பொருந்தியது ; இதை ஜாக்கிரதையாகப் பாது காக்க வேண்டும்' என்று அந்த விளக்கைச் சுட்டிக் காட் டித் தன் புருஷர் சொல்வதாக அவளுக்குத் தோன்றியது. கான் வரும் வரைக்கும் வெளியில் எடுக்காதே; நான் வந்த பிறகு கார்த்திகைக்கு ஏற்றலாம்' என்ற வார்த்தைகள் அவள் கினேவுக்கு வந்தன; அவளே அறியாமல் கண்ணிர் துளும்பியது. ஐக்து நிமிஷ கோம் அவள் எல்லாவற்றை யும் மறந்து துக்கக் கடலில் மூழ்கி ஸ்தம்பித்துப் போள்ை. அதே சமயத்தில் ஸஹஸ்ரநாமம் முடிந்துவிடவே சீதா லசஷ்மி எழுந்து விளக்கைச் சிறிது தாண்டினுள். அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/84&oldid=535323" இலிருந்து மீள்விக்கப்பட்டது