உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2
இலங்கையில் இறங்கினேன்

தற்கு முன்னல் நான் விமானத்தில் பிரயாணம் செய்ததில்லை. விமானப் பிரயாணம் புதிதாக இருந்த காலத்தில் அதன் மகிமையைப்பற்றியும் ஆச்சரியமான வேகத்தைப்பற்றியும் அடிக்கடி பத்திரிகைகளில் செய்திகள் வந்துகொண்டிருந்தன. இப்போதோ பத்திரிகைகளில் விமானத்தைப்பற்றி ஏதேனும் செய்தி வருவதாக இருந்தால் அது பெரும்பாலும் விபத்தாகவே இருக்கிறது !

நான் புதிதாக விமானத்தில் பிரயாணம் செய்தமையால் எனக்கு அதில் புதுமை உணர்ச்சிதான் உண்டாயிற்று. விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் என் பெட்டியைச் சோதனை போட்டு, " கட்டிக் கொள்ளும் துணியும் புத்தகங்களுமே இருக்கின்றன." என்று அநுமதித்து விட்டார்கள். அங்குள்ள டாக்டர் அம்மை அத்தாட்சியையும் காலரா அத்தாட்சியையும் பார்த்துச் சரி என்று சொல்லிவிட்டார். கையில் இருந்த இந்திய நாணயத்தை இலங்கை நாணயமாக மாற்றிக்கொண்டேன். ரூபாய்க்கு ரூபாய் கொடுத்து விட்டார்கள். ஆனால் இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது இலங்கை ரூபாயை இந்திய நாணயமாக மாற்றியபோது வட்டம் பிடித்துக்கொண்டார்கள்.

விமானம் சரியாகக் காலை 11-45-க்குப் புறப்படுவதாக இருந்தது. அதற்குச் சிறிது நேரத்திற்கு முன்