இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
இலங்கைக் காட்சிகள்
செய்யவேண்டுமென்று நினைக்கவேண்டாம். அம்மை ஊசியையும், காலரா ஊசியையும் ஏற்றிக்கொள்ள வேண்டும். அவை நம்முடைய உடம்பில் ஊடுருவிச் சென்றதற்குரிய அத்தாட்சிப் பத்திரமும் வாங்கிக் கொள்ளவேண்டும். இவற்றில் ஒன்று குறைந்தாலும், இலங்கையில் இறங்கும்போது, "வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போய் வாருங்கள்” என்று அனுப்பிவிடுவார்கள். நான் இரண்டு ஊசியையும் போட்டுக்கொண்டேன். காலரா ஊசி என்னை ஒன்றும் செய்யவில்லை. அம்மை ஊசிதான் கொஞ்சம் தொந்தரவு செய்துவிட்டது. நான் புறப்படுவதற்கு முதல் நாள் கடுமையான ஜூரம். புறப்படும்போதும் ஜூரம் இருந்தது. இலங்கையை மிதித்த மறுநாள் ஜூரம் பறந்து போய் விட்டது.
பாஸ்போர்ட்டு, வீஸா, அம்மை அத்தாட்சி, காலரா அத்தாட்சி-இத்தியாதி சீட்டுகளுடன் ஸெப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி ஏர் ஸிலோன் விமானத்தில் ஏறினேன்.