புறப்பாடு
13
யையே நேரே வரச் சொல்லுங்கள்" என்று அதிகாரி சொல்லிவிட்டார்.
செப்டம்பர் 12-ஆம் தேதி நான் கோட்டைக்குப் போனேன்; உள்நாட்டு இலாகா அதிகாரியிடந்தான். அவரைப் பேட்டி கண்டேன். எதற்காகப் போகிறீர்கள்?" என்று கேட்டார். "ஒரு மகாநாட்டுக்கு" என்றேன். நான் வருவதை அறிந்து, கொழும்பு ரேடியோவிலிருந்து, இரண்டு பேச்சுக்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கடிதம் ஒன்று வந்திருந்தது. 'அரசியல் விவகாரத்தில் தலையிடாதவன். அரசாங்க ரேடியோவினரே என் வரவினைப் பயன்படுத்த எண்ணியிருக்கிறார்கள்' என்று காட்ட அந்தக் கடிதத்தையும் கொண்டு போயிருந்தேன். அதைக் காட்டினேன். நான் காட்டினது நான் சந்தேகப் பிராணியல்ல என்பதை அறிவுறுத்த. ஆனால் அதைப் பார்த்த அதிகாரி, “இதற்கெல்லாம் பணம் உண்டல்லவா?" என்று கேட்டார்.
"கொடுக்கலாம்” என்று சொன்னேன்.
"பணம் வாங்குவதாக இருந்தால் சங்கடம் உண்டாகும். ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நீங்கள் சங்கடத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாதென்பதற்காகவே இது சொல்கிறேன்" என்று சொல்லி ஒரு மாச காலம் நான் இலங்கையில் தங்குவதற்கு அநுமதிச் சீட்டு அளித்தார். சலாம் போட்டுப் பெற்றுக்கொண்டு வந்தேன்.
இலங்கைக்குப் போகிறவர்களுக்கு ஊசி முனை அநுபவம் வேண்டும். ஊசி முனையில் நின்று தவம்.