பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

疆4鱷


‘காற்றிலேறியவ் விண்ணையுஞ் சாடுவோம் ; காதற்பெண்கள் கடைக்கண் பணியிலே :


‘மேகலை, வலது காலை முன்னாடி எடுத்து வச்சு மெதுவாக் குனிஞ்சி வாம்மா ‘ என்றாள் கோசலை அம்மாள்.


அத்தையின் அன்பு நிரம்பிய எச்சரிக்கையை கவனத் தோடு பின்பற்றினாள் மேகலை. நிலா முற்றத்திலிருந்து ஒடி வந்து இளங்காற்று நைலான் பட்டுப் புடவையை குசலம் விசாரித்தது. அரியலூர் ராணியை தன்னுடைய ஆசைக்குகந்த பட்டமகிஷியாக ஏற்ற மகிழ்ச்சியுடன் திருச்சிக்கு ஒரு முறை சென்று திரும்பினான் மாமல்லன். மேகலைக்குப் பரிசுகள் சில கொணர்ந்தான் அவன். மலைக்கோட்டைத் தளிர் வெற்றிலையில் ஒருகவளியும், உச்சிப் பிள்ளையார் கோவில் அடிவாரத்தில் விற்கப்பட்ட ஜாதி முல்லையில் ஒரு சேரும், ஒரு நைலான் பட்டுச் சேலையும், ஆர்கண்டி”யில் சோளிக்கு ஒரு கஜமும் வாங்கினான்.


‘நீங்கள் எனக்குப் பரிசளித்து விட்டீர்கள். பதிலுக்கு நான் தரவேண்டுமல்லவா, அத்தான் !’ என்று கேட்டாள் அவள்.


“ஆமாம் ? கொடுக்க வேண்டாமா, பின்னே ?” என்று அவள் பேச்சுக்கு ஒத்துப் பாடினான் மாமல்லன்.