பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரதிநிதித்துவம் இந்த முறைப்படியும் சிறுபான்மையோர் தொகைக் கேற்பப் பிரதிநிதித்துவம் ஏற்படுகிறதில்லை. கட்சிகளின் குழ்ச்சிக்கும், பேரத்திற்கும் இடமுண்டு. வீண் செலவு மாத் திரம் இம்முறையில் நேராது. தேர்தல் ஒருமுறை கடை பெறுகிறதுதான் அதற்குக் காரணம். r விகிதாசாரப் பிரதிநிதித்துவம்:-மேற்சொல்லிய குறைகளே நீக்கிப் பல வகுப்பினர்களுக்கும் இடம் கொடுத்துத் தேசத் தின் பலதிறப்பட்ட அபிப்பிராயங்களேயும் உண்மையாகப் பிரதிபலித்துக் காட்டும் ஒரு சட்ட சபையை ஏற்படுத்த விரும்பினால், விகிதாசார ஒற்றை ஒட்டு மாற்று முறைதான். மிகவும் திருப்திகரமானது. இது அநேக அங்கத்தினர்கள் உள்ள தேர்தல் தொகுதிகளுக்கே தகுதியாகும். பத்து வருஷ ஜனத்தொகைப் பதிவுக் கணக்கு ஒவ்வொன்றுக்கும் தக்க வாறு தொகுதிகளைப் பிரித்து அமைக்கும் அசெளகரியமும் கஷ்டமும் இதில் நேரிடுவதில்லை. வெகு காலமாக நடை முறையில் இருந்துவரும் தேசப்பிரிவுகளேயே தேர்தல் தொகு. திகளாக வைத்து வரலாம். மேலும் ஒவ்வோர் ஒட்டுக்கும். சமமான மதிப்பு ஏற்படுகிறது. இவை இம்முறையின் சில சிறந்த விசேஷங்களாம். - - - இம்முறை வழக்கத்தில் மேற்கொள்ளப்படுவது எப்படி என்பதைப்பற்றிச் சுருக்கமாய்ச் சொல்லுவோம். ஒரு தேர்த லில் சரியானபடி கொடுக்கப்பெற்ற மொத்த ஒட்டுகளைத் தேர்தல் ஸ்தானங்களின் தொகையால் வகுத்து வந்த ஈவுக்கு நிறை யெண் (கோட்டா) என்று பெயர். மற்றத் தேர்தல் முறைகளைப்போல, இம்முறையில் மற்றவர்களேக் காட்டி லும் அதிக ஒட்டுகள் பெற்ற ஓர் அபேட்சகருக்குத் தான் தேர்தலில் வெற்றி என்பது இல்லை. பாக்கிப் பேர்களுக்கு எத்தனை ஒட்டுகள் கிடைத்திருக்கின்றன என்பதையே க்வ னியாமல் கிறையெண்ணின்படி ஒட்டுப்பெறுகிற அப்ேட்சகர் கள் வெற்றி பெறுவார்கள். ஒட்டுச் சீட்டில் அபேட்சகர் களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள், அபேட்சகர்களைப்பற்றித் தங்களுக்கு இருக்கும் அபிப்பிரா யத்தின்படி, அபேட்சகரின் பெயர்களுக்கு எதிராக 1, 2, 3,

  • . ،9 , ہیہ