பக்கம்:ஊர்வலம் போன பெரியமனுஷி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“ஒத்தையிலேயா? அடியம்மா எனக்கு பயமா யிருக்குமே” என்றாள் வள்ளி. அவள் அதைக் கூறிய விதமும், காட்டிய முகபாவமும் அவனுக்கு இனித்தன.

"காரிலே வாறதுக்கு மட்டும் பயமாக இருக்க லியோ ?"

"இதிலே என்ன பயம்?" என்று சவாலிட்டாள் சிறுமி.

“சும்மா கீழே இறங்கி, அந்த ஓட்டலுக்குள்ளே போயி, காபி சாப்பிடு. பயம் ஒண்ணும் ஏற்படாது"

"ஊகும், நான் மாட்டேம்மா."

"சரி. நான் உனக்கு மிக்ஸர், பக்கடா ஏதாவது வாங்கி வரட்டுமா?"

"வேண்டாம். என்கிட்டே காசு இல்லே. ஒரு டிக்கட் கொடு. அது போதும்" என்று உறுதியாகச் சொன்னாள் அவள்.

“நீகாசு தர வேண்டாம். நான் வாங்கித் தாறேன்."

“வேண்டாம். வேண்டவே வேண்டாம்." அவள் உள்ளத்தின் உறுதி, குரலிலேயே தொனித்தது.

உரிய நேரம் வந்ததும், பஸ் புறப்பட்டது. இப்பொழுதும் அதிகமாக ஆட்கள் ஏறவில்லை.

“உன்னை ஊரிலே உங்க அம்மா தேட மாட்டாங்களா? நீ பாட்டுக்கு இப்படி வந்துட்டியே!" என்றான் கண்டக்டர், டிக்கட்டைக் கிழித்துக் கொடுத்தபோது.

“ஒருத்தரும் தேடமாட்டாங்க. ஆமா" என்றாள் வள்ளி.

வந்த வழியே மீண்டும் பஸ் பிடித்துத் தந்த காட்சிகள் அவளுக்கு அலுப்புத் தரவில்லை. மகிழ்ச்சியைப் புதுப்பிக்க உதவின அவை. ஆனால் திடீரென்று-

25