இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகவுரை
இந்த அந்தாதிப் பாடல்களில், “முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் சொல்லும் வைத்து எழுதலாம்” என்னும் நன்னூல் சூத்திரப்படி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கம்பராமாயணம், பத்துப் பாட்டு முதலியவற்றில் உள்ள சொற்களையும் பொருள்களையும் அப்படியே வைத்து எழுதியிருக்கிறேன்.
இந்த அந்தாதிக்கு ஒரு குறிப்புரையையும் எழுதியுள்ளேன். அதில் பல நூல்களிலிருந்து விரிவாக மேற்கோள்களைக் காட்டியிருக்கிறேன்.
அன்பன்,
கி. வா. ஜகந்நாதன்