உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

35


கடந்துதான் உலகம் உணர்ந்தது. தூக்குமேடை ஏறுவதற்கு முன் நாள் இரவு, தனது சிந்தனையிலே வழிந்து கொண்டிருந்த சிந்தனை ஊற்றுப் பெருக்கை அள்ளி மக்களுக்கு வழங்க எனக்கு வாய்ப்பு இல்லையே என பியூஸ்க் மனம் புழுங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது “அய்யா” என்று ஒரு குரல் கேட்டது. அந்த விடுதலை வீரன் திரும்பிப் பார்த்தான். சிறைக் கம்பிகளுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த அந்தக்காவலன் வணக்கம் என்றான். கனல் தெறிக்கும் கண்ளோடு என்ன என்று கேட்டார். அய்யா தாய்நாட்டு மக்களின் தெய்வம் என தங்களைப் போற்றுபவர்களில் நானும் ஒருவன். இறுதி காலத்தில் ஏதோ உங்களுக்கு ஓர் அற்ப உதவி செய்தேன் என்ற பேறு எனக்கு கிடைக்குமா என்றான்.

பியூஸிக், மகிழ்ச்சியோடு அவனை நோக்கி எழுதுவதற்கு கொஞ்சம் தாளும், எழுதுகோலும் கொடுப்பாயா என்று கேட்டார். என் உயிர்போவதானாலும் நான் கவலைப்படவில்லை. கொண்டு வந்து கொடுக்கிறேன் தலைவா என்று சென்று எழுதுகோலும், தாளும் கொண்டுவந்து கொடுத்தான்.

அவற்றைப் பெற்ற அந்த மாவீரன் இரவெல்லாம் எழுதினான். பொழுது விடிய விடிய தன்னுடைய சிறை வரலாற்றை எழுதிக்கொண்டே இருந்தார். ஊற்றெடுத்த சிந்தனைக் கருவூலங்களைத் தாள்களில் எழுதினார். அன்று காலை காவலனை அழைத்து, நான் எழுதிய இந்த வரலாறு