பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா செய்யக் கூடிய சக்தி எதற்கு உண்டு? உடற் பயிற் சிக்குத்தான்! எவ்வாறு என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? உடற் பயிற்சி செய்யும்போது, அதிகமான காற்றை நாம் உள்ளே இழுக்கிறோம். உடலுறுப்புக்கள் இயங்க வேண்டுமானால் உயிர்க்காற்றும் அதிகம் வேண்டுமே! உறுப்புக்கள் இயங்கும்போது, கழிவுப் பொருட்களும் கரியமில வாயுவும் வெளிப்படுமே! அந்த கழிவுப்பொருட்கள் செல்களிலே தங்கிவிடும்போது, செல்கள் பாதிக்கப்படுகின்றன. செயல்படாது தடை செய்யப்படுகின்றன. அந்தத் துன்ப நிலையை, மூளையின் சுவாசத்தலத்திற்கு அனுப்புகின்றன. மூளைத்தலமோ, உதர விதானத்தைத் தூண்டி அதிகக் காற்றை உள்ளிழுக்க ஆணைப் பிறப்பிக்கின்றது. உள்ளே (பிராணவாயு) உயிர்க் காற்று வந்ததும், இரத்தம் விரைவாக எடுத்துக் கொண்டு ஓடுகின்றது. கழிவுப் பொருட்கள் அகன்றதும் செல்கள் களைப்பு நீங்கி விடுகின்றன. ஆகவே இரத்தத்தை விரைவுபடுத்துகின்ற உடற்பயிற்சியால் உடல் நலமே பெறாமல் வேறு எதைப் பெற முடியும்? - 10 மைல் நீளமுள்ள குழாய்களில் பாய்ந்தோடும் இரத்தத்தைப் பாய வைக்கும் கருவி ஒன்று, உடலுக்குள்ளே இருக்க வேண்டு மல்லவா! அந்த அற்புதக் கருவிதான் இதயம்! நாம் இதயத்தின் ஆற்றலைப் புரிந்துகொண்டால் தான், உடற்பயிற்சிக்கும் இதயத்திற்கும் உள்ள உறவ என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.