பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா தண்ணில் மூழ்கித் தத்தளிப்பவனுக்குக் கரை ஏற, பட்டுநூல் உதவுமா? எண்ணற்ற வழிகளில் ஏக்கத்தையும் இன்னலையும் தந்திருக்கின்ற வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட, மெலிந்த நோயுள்ள உடல் போதுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! உயர்ந்த வாழ்க்கை, மனதுக்கு உகந்த வாழ்க்கை, மக்கள் போற்றும் மணியான வாழ்க்கை நாம் வாழ வேண்டுமானால் உடலைப் பாதுகாக்க வேண்டும்! உடலைப் பாதுகாத்தே தீரவேண்டும். எவ்வாறு? பணத்தைப்பெட்டியிலே பூட்டிவைத்துக் கொண்டு, தினந்தினம் தனியாக எண்ணிப் பார்த்து, கட்டிக் காத்து மகிழ்கின்றானே கஞ்சன், அவன் செய்கையைப் போல உடலைக் காக்க வேண்டும். பிள்ளையே இல்லாதவள் ஒருத்தி, நீண்ட காலத்திற்குப் பிறகு தான் பெற்றெடுத்த குழந்தையைக் கொஞ் சுவது போல, உடலைக் கொஞ்சும் செயல் வேண்டும். நன்றியுள்ள வேலைக்காரன், தன் முதலாளியிடம் காட்டுகின்ற விசுவாசத்தைப் போல, தன் உடலிடம் ஒவ்வொருவரும் நேசம் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் உடல் நமக்கு உதவும். உயிர் நமக்கு உதவும். உலகம் நமக்கு இனிக்கும். வாழ்க்கை நமக்கு சிறக்கும். இதற்காகத்தான் நாம் செய்கிறோம் உடற்பயிற்சி!