பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் - 47 உடற்பயிற்சியானது இயற்கையோடு இயைந்தது. நலிந்த உடம்பின் நரம்புகளை உறுதியாக்க வல்லது. அவலம் நிறைந்த சூழ்நிலையை மாற்றி ஆண்மையை ஊட்டவல்லது ஊக்கம் தருகின்ற உடல் வளத்தையும், உல்லாசம் தருகின்ற உடல் பலத்தையும், உலக வாழ்க்கையை அனுபவிக்கக்கூடிய உடல் உறுதியையும் வழங்கும்போது, மனிதனுக்கு வீரம், தானே வந்து விடுகிறது அல்லவா! (9) வாழ்க்கையில் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்துகிறது. வாழ்க்கையின் நோக்கமே இன்பம்தான். இன்பமான வாழ்க்கையைத் தருகின்றது உடற்பயிற்சி என்றால், ஏற்றுக்கொள்ளாதவர்களை அறிவிலிகள் எனலாம். இல்லை, பைத்தியக்காரர்கள் என்றே கூறலாம். வெளியில் திரியும் வளியை வாங்கி, வயத்தில் அடக்கினால் பளிங் கொத்துக் காயம் பழுக்கும், ரோமம் கறுக்கும்’ என்றார் திருமூலர். வானவெளியில் திரிகின்ற காற்றை உட்கொண்டு, உள்ளே அடக்கி வைத்திருந்தோமானால், உடல் பளபளவென மின்னுகின்ற அழகையும், மயிர் கறுத்து மினு மினுப்பையும் கொடுக்கும் என்ற பழைய பண்பாட்டின் வழியேதான் உடற்பயிற்சி இயங்குகிறது. இலவசமாகக் கிடைக்கின்ற காற்றைப் பயபக்தி யோடு பயன்படுத்தத் தூண்டுகிறது உடற்பயிற்சி. நலம் பெற வேண்டுகிறது உடற்பயிற்சி. எந்த உறுப்பில் நோய் இருக்கிறதோ, அந்த உறுப்பினை இயக்கிக் கசடுகளை அகற்றி, அசடில்லா