14 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அப்படி! வேண்டாதவர்கள் மூட்டிவிட்ட வதந்திக்கு ஆளானவர்களின் அங்கலாய்ப்பு! உடற்பயிற்சி என்றதுமே, உடலை முறுக்கி, வலியைப் பெருக்கி, வாழ்வைச் சுருக்கிக் கொள்கின்ற வேலை என்றே அவர்கள் அத்தனை பேரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்! ஐயோ பாவம்! உடற் பயிற்சி செய்பவர்கள் அத்தனை பேரும் மூடர்களாக, முரடர்களாக மாறிவிடுவார்கள், விடுகிறார்கள், என்ற ஓர் கற்பனைப் பயம்! 'முரட்டு உடல் வந்துவிடும்! அதனால் அசட்டுத் தனமான காரியங்கள் செய்யத் தூண்டும்' என்ற அச்சத்துக்கும் ஆளாகியிருப்பவர்கள் அநேகம்! சோம்பேறிகளின் சூழ்ச்சி மொழிக்குப் பலியாகி, பயிற்சியைப் பழித்துவிட்டு, ஒதுங்கியவர்கள், ஒதுக்கியவர்கள் என்ன ஆனார்கள்? எங்கே போனார்கள் என்பதை சரித்திரம் கூறும்! அப்படி ஒதுக்கியதால்... பயிற்சிக்கு எந்தவித நட்டமும் கிடையாது! தும் பிக்கையை உயர்த்திக் கொண்டு கம்பீரமாக நடந்து போகின்ற யானையைக் கண்டு, தொடர்ந்தோடிக் குலைக்கின்ற நாய் போல, துரத்திப் பிடித்தவர்கள், குலைத்தவர்கள் ஓய்ந்தார்கள், சாய்ந்தார்கள், மாய்ந்தார்கள். - உடற் பயிற்சியைச் செய்தவர்கள் உடலால் உயர்ந்தார்கள் உள்ளத்தால் உயர்ந்தார்கள்! ஒப்பற்ற அற்புத வாழ்வை வாழ்ந்தார்கள்! பெற்ற மனிதப்
பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/16
Appearance