உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 39 உடற்பயிற்சி ஊளைச் சதையை ஒழித்து, இறுகிய தசைகளை அமைத்து, தசைகளைத் தக்க முறையில் பாதுகாத்து, வாழ்க்கைக்கு உதவக்கூடிய தகுதியையும் திறமையையும் தந்துவிடுகிறது. - (2) உடற்பயிற்சியால் நன்றாகப் பசி எடுக்கிறது. ஆமாம். திரைகடல் ஓடுவதும், தீக்குள் சாடுவதும், காலமெல்லாம் ஓயாமல் பாடுபடுவதும் எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்கே என் பார்கள். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பதைவிட ஒரு சாண் வயிறே பிரதானம் என்பதுதான் இக் காலப் பழமொழி. 'வயிற்றை வளர்ப்பதே வாழ்க்கை என்ற குறிக்கோள் உடைய காலமல்லவா! வாழ்க்கை இனிப்பதும், கசப்பதும் இந்த வயிற்றால் தான். வருகின்ற நோயனைத்துக்கும் காரணம் வயிற்றுக் கோளாறுதான் ஆதாரமாகவும் அடிப்படையாகவும் அமைந்திருக்கிறது. ஒன்று மலச்சிக்கலில் இருந்து நோய் தொடங்கும். அல்லது ஜீரணக் கோளாறில் இருந்து ஆரம்பிக்கும். பசியெடுக்காத பணக்காரர்கள் எத்தனை பேர் பசியெடுக்க மருந்தைத் தேடி ஓடுகின்றனர்! அதிக உணவை உண்டு விட்டு அவதிப்படுவோர்கள் எத்தனை பேர்! 'நன்றாகத்தான் சாப்பிடுகிறேன், என் உடல் தேறவே மாட்டேன் என்கிறது என்று அலறித் துடிப்பவர்கள் நாட்டில் நிறைய பேர் உண்டு. சாப்பிடுகின்ற உணவின் சத்தை, வயிற்றுப் பாகங்கள், ஜீரண உறுப்புக்கள் சரிவர வாங்காமல் விட்டுவிடுகின்றன. சத்தெல்லாம் கழிவுப் பொருட்களாக அல்லவா வெளியேறி விடுகின்றன!