உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா தெரியும். அந்த அற்புத சக்தி படைத்த சுவாசத்தை சில வினாடிகள் நேரம் கட்டுப்படுத்தியிருக்கலாம்; ஐந்து நிமிட நேரத்திற்கு மேல் காற்று இல்லையேல், நம் கதி அதோ கதிதான். இதுவும் நமக்குப் புரியும். நீரின்ைக் குடிக்காமல் நாட்கணக்காக இருக்கலாம். உணவை உட்கொள்ளாமல் நாம் மாதக் கணக்காகக் கூட வாழலாம். ஆனால் காற்றில்லாமல் வாழ முடியுமா? நமது உயிரைக் காக்கின்ற உயிர்க் காற்றை, (பிராணவாயுவை) முழுக்க முழுக்கப் பயன்படுத்தி முழுப்பயனைப் பெற்றுக் கொள்ளத்தான் உடற் பயிற்சி உதவுகிறது என்பதை நாம் உணர வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது உடலுறுப்புக்களை ஒழுங்கான முறையில், ஒரே அளவில் இயக்குகிறோம். அப்பொழுது அதிகமான காற்றை உள்ளுக்கு இழுக்கிறோம். நுரையீரலை நிரப்புகிறோம்; சிறிது நேரம் உள்ளே வைத்திருந்து விட்டு, பிறகு வெளி விடுகிறோம். நிறையப் பெற்ற நுரையீரல், தேவையான பிரான வாயுவை எடுத்துக் கொண்டு வேண்டாத காற்றை வெளியே அனுப்பிவிட்டு, நிம்மதியாக சுருங்கிக் கொள்கிறது. இதற்கிடையிலே எத்தனை மாற்றம்? ஏற்றம்? ஏன்? முறையான கேள்வி! முற்றிலும் தேவையான கேள்விதான்! நம் உடல் உறுப்புக்கள் அனைத்தும் செல்களால் ஆனவை. ஒரேவிதமாக உள்ள செல்கள் கூட்டம் ஒன்று