68
மெய்மறந்து நின்று கொண்டிருந்தபொழுது, அவரது நெஞ்சமோ அவரது கனவை நினைவூட்டி அசைபோட்டுக் கொண்டிருந்தது. எங்கெங்கு சென்ருலும், இகளஞர்களின் இன்பப் பொழுதுபோக்காக விளையாட்டு விளங்குவதைக் கண்டு, அவருக்கு உணர்ச்சி பிறந்தது. எழுச்சி மிகுந்தது. தனது பொறுப்பு இன்னும் அதிகமாவதையும், அந்தப் பொறுப்பை செயல்படுத்த வேண்டிய அத்யாவசியமான நிலைமையையும் அவர் உணர்ந்தார். அதற்கான காரியங். களில் செயல்படத் தொடங்கினர்.
1870-ம் ஆண்டு ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே நடந்த கடும் போரின் கொடுமையான காட்சிகள் அவர் மனக்கண்முன்னே தோன்றின. வருங்கால வாலிபர்கள் போர்ப் பயம் நீங்கி, பேரமைதியுடன் வாழவேண்டும் என்று விரும்பினர் கூபர்டின், தனக்குத்தானே நிர்ண யித்துக் கொண்ட இந்தப் பொறுப்பை நிறைவேற்ற, தன் தாய்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வழிதனைக் கண்டார்.
1888-ம் ஆண்டு தனது இருபத்தி ஆரும் வயதில், பிரெஞ்சு நாட்டிலுள்ள கல்லூரிகள், பள்ளிகள் அனைத் திலும் உடலியற் கல்வி நிகழ்ச்சிகள் துரிதமாக நடைபெறும் அளவுக்கு வழியமைத்துத் தந்தார். 1889-ம் ஆண்டு உடலாண்மை நிகழ்ச்சிகள் (Athletics) பற்றிய மாத இதழ் ஒன்றைத் தொடங்கி, நாடு தழுவிய விளையாட்டு உணர்ச் சியை, உற்சாகத்தை ஊட்டினர். பிரெஞ்சு நாட்டின் கல்விக் குழுவின் முல்மாக, பல்வேறு நாடுகளுக்கு 'மீண்டும் ப்யணம் செய்தார்.
ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் உடலியற் கல்வி எவ்வாறு செயல்படுகின்றது. என்பதன்