இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13.
புதிய ஒலிம்பிக் பந்தயம் பிறந்த கதை
________________
13. புதிய ஒலிய பிக் பந்தயம் பிறந்த கதை
ஒலிம்பிக் பந்தயங்களிலே பங்கு பெறும் - நோக்கம் வெற்றி பெறுவதற்காக மட்டும் அல்ல; போட்டியில் பெருமையோடு பங்கு பெற்றுவதற்காகத் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது--வாழ்கையில் வெற்றி கொள்ளும் இலட்சியம் மட்டும் அல்ல- வாழ்க்கையோடு வளமாகப் போராடுவதுதான்.
5 அடி 8 அங்குலம் உயரமே உள்ள ஒரு மனிதன் பாரிஸ் நகரத்திலிருந்து முழங்கிணான் பாரெங்கும் அவன் குரல் சீங்கநாதம் போல் சிதறி ஓலித்தது, செவி மடுத்தவர்கள் சிரத்தை அசைத்தனர். அது அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏளனமாகவும், ஏற்றகொன்றலே - அமைத் திருந்தது. புதுப்பாதை காண வரும்பி, இன்று புகழின் சிகரத்தில் - வீற்றிருக்கும் .பேரருளால் பெருந்தன்மை நிரம்பிய பெரும் பண்பாளன். ஆற்றல்மிககு மறவன், அவனி போற்றும் ஆண்மையாளன் திரு. பியரி கூபர்டின் பிரபு புதிய ஒலிம்பிக் பந்தயம் தன்னைத் தோற்றுவித்தான்... பழையதை புதுப்பித்தான் என்பதைவிட, மறைந்ததை மண்ணுலகில் மீண்டும் பிறப்பித்தான் என்பதே சாலப் பொருந்தும்.
பிரெஞ்சு நாடு பெற்றெடுத்தத் திருமகன் கூபர்டின் பிரபு. 1862ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் . .பல்வேறு துறைகளில் புகழ் பெற்று விளங்கும் பாரிஸ் நகரம்.