69
உன்னிப்பாக ஆராய்ந்ததோடல்லாமல், உருவிழந்து போயிருந்த ஒலிம்பியாவையும் சுற்றிப் பார்த்து மனம். நெகிழ்ந்தார் 1875லிருந்து 1881 -ம் ஆண்டுவரை. ஜெர்மானிய புதைபொருள் ஆராய்ச்சி வல்லுநர்கள், ஒலிம்பியா பள்ளத்தாக்கு முழுவதையும் அகழ்ந்தெடுத்து, ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கைகள் அனைத்தும், அவரது. முயற்சிக்குப் பெருந்துணை அளிப்பனவாக அமைந்தன.
1500 ஆண்டுகள் ஆழப் பெருங்குழியில் அமைதியாக உறங்குவதுபோல் இருக்கும் அற்புதமான "ஒலிம்பிக் பந்தயங்கள’ மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு. வந்தாலன்றி, நாடுகள் அனைத்தும் எதிர்ப்பார்க்கின்ற நன்மை எதுவும் கிடைக்காது. ஆகவே, இளைஞர்களே.
ஊக்குவித்து உற்சாகப்படுத்த, பிரெஞ்சு மக்கள் மட்டு: மன்றி, பிற நாட்டினரும் பெரு முயற்சி எடுக்கவேண்டும். விளயாட்டுப் போட்டிகள் விரைவில் நடை பெறல் வேண்டும் என்ற தனது கருத்தை வெளியிடத் தக்கத் தருணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். . எல்லா வளமிக்க நாடுகளிலும் விளையாட்டுக்கள் வளர்ந்துகொண்டேதான் வருகின்றன. தனியே கிடக்கும் மலர்களே நூல் கொண்டு மாலையாக்குதல் போல், தனித் தனியே விஆளயாடும் நாடுகளை ஒன்று சேர்த்து. ஒர் அரங்கத் திலே ஆடவிட்டால் ?... சிறு தீப்பொறியாக இருந்த ஆசை, காட்டுத் தீயாக உள்ளத்தில் பரவி விட்டிருந்தது. சென்ற இடங்களிலெல்லாம் அவர் தன் அடக்க இயலாத ஆசையை' வெளியிட்டபொழுது, கேட்டவர்கள் அனைவரும் "தவருண வழி காட்டும் தத்துவ வாதி” என்ற பட்டத்தைச் சூட்டி விட்டு ஒதுங்கி விட்டனர். அவர்கள் அவ்வாறு கூறுவதற்கும் iாரணம் இருக்கத்தான் செய்தது.
பத்தொன்பதாம் நூற்ருண்டில் அதாவது 1859-ம் ஆண்டும் அடுத்த ஆண்டும், கிரேக்கர்கள் முழு முயற்சி