பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்க்விஞ்ர் 197 நடுநிலை உயரும் போதும் நன்மையின் உண்மைப் போதும் விடுதலை விடியும்; அந்நாள் விடிந்தாலே விடுதலையாம்!" என்று காப்பியத்தை முடிக்கிறார் பெருங்க விக்கோ அவர் இயற்றியுள்ள மற்றொரு குறுங்காவியம் 'வைகறை வரும்!” மரபு வழியில் கவிதைகள் இயற்றும் பெருங்கவிக்கோ புதுக்கவிதை எனப் பெயர் பெற்று வளர்ந்துவிட்ட -யாப்பில்லாக் கவிதையை வெறுத்து ஒதுக்கவில்லை. புதுக்கவிதைப் போக்கிலும் கவிதை படைத்து,புதுமையை வரவேற்றிருக்கிறார். மரபும் புதுமையும் கலந்து. இரு வழியிலும் கவிதைகள் பாடி, ‘வைகறை வரும் என்ற குறுங்காவியத்தை அவர் எழுதியுள்ளார். மக்களின் வாழ்க்கை நலனுக்குத் தீங்குகளும் நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊறுகளும் செய்து கொண்டு, மனித இனத்தின் பெரும் கறையாக நீடித்து வளர்கிற சாதி வேற்றுமைகளையும், அவற்றால் விளையும் கேடு களையும் எடுத்துக்காட்டும் விதத்தில் படைக்கப்பட்டிருக் .கிறது வைகறை வரும்’ என்கிற சிறு காவியம். - சாதி பேதங்கள் மக்களை மனிதராக வாழவிடாது கெடுக்கின்றன. சாதி வேற்றுமைகள் நீக்கப்பட்டு, எல்லோரும் தமிழர் என்ற ஓர் இனமாக வாழவேண்டும் என வலியுறுத்துகிறது அது. அத்துடன் சிற்றுார்கள் திருந்திட வேண்டியதன் அவசியத்தையும் கூறுகிறது. 'சிற்றுர் திருந்திட வேண்டும்-இந்தத் தேசம் திருந்திட வேண்டில். - சிற்றுரீர் கல்விபெற வேண்டும்-நம்மின் சிறுமை தவிர்த்திட வேண்டில். ஆ-9'