பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 99 "எண்ணியதைச் சொல்வேன் எதுவரினும் அஞ்சுகிலேன்! உள்ளொன்று வைத்துப் புறமொன்று - பேசிவரும் கள்ளத்தன மெனக்குக் காட்டத் தெரியாது! நல்லவர் போல் நன்கு நடித்துப் பிறர் நலத்தைக் கொல்கின்ற கொடுமை கொஞ்சமும் புரியாது! வஞ்சம் புரட்டால் வையத்தை ஆட்டுவிக்கும் நஞ்சையென் நல்லகுரல் நவிலவே நவிலாது! பிஞ்சில் பழுத் தறியேன், பெருந்துன்பம் - ஏற்றதனால் நஞ்சையும் அமுதமாய் நாளுக்கும் நெஞ்சுடையேன்!” பெருங்கவிக்கோவின் தன்னம்பிக்கை இமயம் போல் உயர்ந்தது, பெரியது, வலிமை மிக்கதாகும். எனவேதான் அவரால் சரித்திரம் படைப்பேனம்மா' என்று நெஞ்சு யர்த்திப் பாட முடிகிறது. - "இருட்டுக் குகை வழியில்-நானோர் இதய விளக்கானேன்! மருட்டும் சதிவலைக்குள்-நானோர் வழிகாண் மொழியானேன்! குருட்டு விழியார்க்கெலாம்-நானோர் கோடிக் கண்ணானேன்!” என்றும், அஞ்சிச் சாவார்முனே-நானோர் அயரா உழைப்பானேன்! கெஞ்சிப் பிச்சை கேட்பார்-முன்னே