பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. காவிய நாடகம்

கவிதைத் துறையில் புதிய சாதனைகளை சாதிக்க வேண்டும் என்ற உன்ளத்தின் தணியா ஆவேச எழுச்சி’ கொண்ட பெருங்கவிக்கோ கவிதை இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் தனது ஆற்றலைக் காட்டியிருக் கிறார். அப்படிப்பட்ட ஒரு எழுச்சியின் விளைவாகவும், திறமையின் மலர்ச்சியாகவும் விளங்குவது கெளதமரின் கண்ணிர்' என்ற காவிய நாடகம்.

இலங்கை இனக் கலவரத்தையும், சிங்கள வெறியரால் தமிழ் மக்கள் அனுபவிக்க நேரிட்ட கொடுமைகளையும் வதைகன்ையும், புத்த மதத்தினர் என்று கூறிக் கொள்ளும் சிங்களவர்கள் புத்தரின் அறவுரைகளை மிதித்துத் துவைத்து விட்டு வன்முறைச் செயலில் ஈடுபட்டு வெறி யாட்டம் ஆடியதையும் மனவேதனையுடன் எடுத்துச் சொல்கிறார் கவிஞர், இக்காவிய நாடகத்தில். ‘உலக மூலைகளில் எங்கெங்கோ மனித இனம் கொடுமைப்படுத்தப்படுவதை, அழிக்கப் படுவதைக் கண்டு இரக்கப்படும், பாடும் அருமைச் சகோதரர்கள், நமக்குப் பக்கத்தில் பதினெட்டுக் கல் தொலைவில் நமது சகோதத்ர் களுக்கு நடந்த பெரும் கொடுமைகளை, இரத்த ஆறு ஒடியதைக் காண வேண்டாமா? என்ற நியாயமான வேதனை பெருங்கோவின் உள்ளத்தை வாட்டியது. கொந்தளித்துத் தவித்த கவியுள்ளத்தின் வேட்கைக்கு