பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


சீரார் சிரிப்பை நெஞ்சில் வாங்கிக்கொண்ட அம்பலத்தரசன் இமைப் பொழுதிற்குத் தன்னையே மறந்துவிட்டான். வணக்கம் தெரிவிக்க சில வினாடிப்போது கழித்துத்தான் அவனுக்கு ஞாபகம் வந்தது.

“உங்களைச் சந்தித்ததிலே எனக்கு ரொம்பவும் சந்தோஷம் ஐயா !” என்றாள் அவள். உங்க விமர்சனங் களை நான் தவறாது படிப்பேனாக்கும்!"என்றாள்.

அவள் குறித்த பாராட்டுரை எதுவும் அவன் இதயத்தில் பதியவில்லை. ஆனால் அவளது தூய எழில் வடிவம்ஆதிபராசக்தியின் தெய்வக்கோலம் - மட்டுமே அவனுள் பதிந்திருந்தது உள்ளத்தெழுந்த தெய்வ ஒளி அவனுடைய கைகளுக்கு பாய்ந்தது; அந்தக் கைகள் குவிந்தன. குவித்த வண்ணமே இருந்தன. விழிமலர்களில் நீர் முத்துக்கள் தத்தளித்தன

சூழ இருந்தவர்கள் அதிசயித்தார்கள்.

சூழல் உணரப்பட்ட தருணத்தில், அம்பலத்தரசன் தன்னை உணர்ந்தான், ஊர்வசியைப் பார்த்தான். பிறு தரமும் அவள் சிரித்தாள். எந்நேரத்தில் சிரித்தாளோ, அந்தச் சிரிப்பு அவனுள் பதிவாகிவிட்டது.

அவள் தெய்வமாகி நின்றாள் - அன்று.

இன்று அவளே தெய்வமாகி வந்தாளோ ?

தெய்வம் தேடிவரக் கூடாதா, என்ன ?

தெய்வம் பேஷாகத் தேடிவரலாம் ! - இதோ தேடி வந்து விட்டதே!

எரிந்த சிகரெட் அவன் விரல் துணியைச் சுட்டதும் தான், அவனுக்கு தான் இருந்த ஹோட்டலின் ஞாபகம் சுட்டது; எழுந்தான். பத்துக் காசைக் கல்லாப்பெட்டியில் வைத்தான் வாசலுக்கு விரைந்தான். இடது பக்கம் திரும்புவதற்குப் பதிலாக வலப்புறம் மடங்கினான்.