ஆதி அத்தி 五岳 ஞேர் மரபு. அந்தி மரபின்படியே உங்கள் வரவைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் நாட்டியம் யாரிடம் பயின்றீர்கள்? அத்தி : வேந்தே, நான் இந்த நாட்டிற்கு வந்து பல ஆண்டுகள் இருந்துதான் நாட்டியம் பயின்றேன். சோழநாடு பரத நாட்டியத்திற்கும் கலைகளுக்கும் தாயகம் போன்றது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. தங்களுடைய ஆதரவாலும் ஆர்வத்தாலும் ஆகளெல்லாம் இங்கே ஓங்கி வளர்வதை அறிந்து என்னைப் போன்ற கலைஞர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந் திருக்கிரு.ர்கள். தங்களை நாங்கள் நாள்தோறும் பாராட் டிப் போற்றிக்கொண்டிருக்கிருேம். கரிகாலன் : சோழ நாட்டுக் கலைக்கு உங்கள் நாட்டிலும் பெருமை ஏற்பட்டிருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது நீங்கள் இங்கு வந்த அலுவல் யாது? அத்தி : வேந்தே, உண்மையான கலைத் திறமை இருக்கிறதென்ருல் அதை நன்கு சுவைக்கத் தெரிந்தவர் களுக்குக் காண்பித்து அவர்களுடைய நன் மதிப்பைப் பெறவேண்டும். அப்பொழுதுதான் அந்தக் கலை சிறப் பெய்துகிறது எனது நாட்டியக்கலே தங்கள் முன்னிலை யிலே பாராட்டுப் பெற முடியுமானல் அதைவிட எனக்குப் பெரிய பேறு வேறென்றும் இல்லை. நாட்டி யத்தின் நுட்பமெல்லாம் அறிந்த தங்கள் சபையிலே நான் ஆடுவதற்கு ஆவலோடு வந்திருக்கிறேன். தங்க ளுடைய அன்பான அனுமதிக்குக் காத்திருக்கிறேன். கரிகாலன் : அப்படியா? மிக வு ம் மகிழச்சி(அமைச்சரை நோக்கி) அமைச்சரே, இவருடைய நடனத்தைப் பார்ப்பதற்கு நமது கலையரங்கில் நாளே
பக்கம்:ஆதி அத்தி.pdf/16
Appearance