ஒலி வாங்கி
43
1. பொது மேடைப்பேச்சுகளுக்கேற்ற உயர்தர ஒலிவாங்கி.
2. மேடைமீது எவ்வளவு அசைந்தாடிப் பேசிணாஆலும் நன்கு ஒலி வாங்கக்கூடிய உயர்தர ஒலிவாங்கி.
3. குறைந்த விலையில் விசையுடன் கூடிய அதிக ஒலி பரப்பக் கூடிய ஒலிவாங்கி.
4. வளைந்து கொடுக்கக்கூடிய ஒலிவாங்கி.
5. சாதாரணப் பொதுமேடைப் பேச்சுகட்குப் பயன்படும் நடுத்தர ஒலிவாங்கி.
6. வாணோலி நிலையங்களிலும் தொலைக்காட்சி (Television) நிலையங்களிலும் ஒலிபரப்பப் பயன்படுத்தும் உயர்தர ஒலிவாங்கி.
7. இல்லங்களில் ஒலிப்பதிவு செய்யவும் இன்டர்காம் (intercom) அமைப்புகட்கும் பயன்படும் ஒலிவாங்கி.
8. கையில் வைத்துக்கொண்டு ஒலிபரப்பப் பயன்படும் ஒலிவாங்கி.
9. விளையாட்டுப் பந்தய மைதானங்கள், விழாக் கூட்டங்கள், உந்து வண்டிகள் ஆகியவற்றில் பயன்படும் ஒலிவாங்கி.
10. நாடாப்பதிவு, கம்பிப்பதிவு, தட்டுப்பதிவு ஆகிய செயல்களில் மொழி ஆய்வுக் கூடங்களில் பயன்படும் ஒலிவாங்கி.
11. பாண்டு வாத்தியம், கருவி இசை, நாடாப்பதிவு முதலியவைகட்குப் பயன்படுவது. குரல், இசை இரண்டையும் மிகவும் நன்ராஆக ஒலிபரப்பக் கூடியது.
12, 14. புதுமையாகக் காணப்படும். இவ் ஒலிவாங்கிகள் கையில் வைத்தோ அல்லது மேசைமீது வைத்தோ ஒலிபரப்பப் பயன்படும் கையடக்கமான ஒலிவாங்கிகள்.
13. மேடைமீது நடிப்போரும் நடனமாடுவோரும் இவ் ஒலிபெருக்கியைக் கழுத்தில் மாட்டிக்கொள்வதன் மூலம் தெளிவான ஒலிபரப்புக் கிடைக்கும்.