உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒலி வாங்கி

41


பெற்றுள்ளன. இத் தகடுகளுக்கிடையில் பெட்டி போன்ற அமைப்பில் கார்பன் துணுக்குகள் நிறைந்திருக்கும். கார்பன் என்பது கரி. ஒரு மின்னோட்டம் முன்புறமுள்ள தகட்டில் நுழைந்தால், அது கார்பன் துணுக்குகள் வழியாகப் பின்புறமுள்ள தகட்டினை அடைகின்றது. இத் தகட்டிலிருந்து மீண்டும் வெளியேறுகின்றது. இந்த அமைப்பில் மின்னோட்டம் வன்மையும் மென்மையும் இல்லாமல் ஒரே நிதானமாகப் பாய்ந்து செல்லுகின்றது. இந்த மின்னோட்டத்தால் யாதொரு மாற்றமும் இல்லை.

ஒலி வாங்கியின் முன்புறத்தில் ஒருவர் நின்று கொண்டு பேசினால், அவருடைய பேச்சினால் உண்டாகும் ஒலி அலைகள் முன்புறமாகவுள்ள தகட்டை அதிரச் செய்கின்றது. இதனால் கார்பன் துணுக்குகளிடையே உள்ள அமுக்கத்தில் மாற்றத்தை விளைவிக்கின்றது. சிதறிக் கிடக்கும் கார்பன் துணுக்குகள் நெருக்கமாகச் சேர்வதால், மின்னோட்டம் அவற்றின்வழியே நிகழ்வது எளிதாகின்றது; அஃதாவது மின்னொட்டம் இப்பொழுது அதிகமாகின்றது. கருவியிலுள்ள முன் பக்கத் தகடு முன்பக்கமாக விலகும் பொழுது இதற்கு எதிரிடையான நிகழ்ச்சி ஏற்படுகின்றது. அதாவது, பேசுவோரின் வாய்ப்புறத்துத் தகடு முன்பக்கமாக அதிர்ந்து ஆடுங்கால் அதற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/49&oldid=1395858" இலிருந்து மீள்விக்கப்பட்டது