பக்கம்:இளைஞர் வானொலி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. ஒலி வாங்கி

க் காலத்தில் திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் நடைபெறும் மாபெருங் கூட்டங்களிலும் கல்லூரி பள்ளிபோன்ற இடங்களில் நடைபெறும் விழாக்களிலும் ஒலிவாங்கி (microphone) என்ற கருவியை வைக்கின்றனர். இன்று பட்டி தொட்டிகளில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இக்கருவி பெரிய அளவு பயன்படுகின்றது. ‘பருப்பு இல்லாத திருமணமா?’ என்ற வழக்கு மாறி ‘மைக் இல்லாத திருமணமா?’ என்ற சொல் வழக்குத் தோன்றியிருக்கின்றது ! மைக்ரொபோன் என்ற ஆங்கிலப் பெயர்தான் மைக் என்று சுருங்கி வழங்குகின்றது—கிருஷ்ண மூர்த்தி என்ற பெயர் ‘கிட்டு’ என வழங்குவதைப் போல!

ஒலிவாங்கியின் சில அமைப்பு வகைகளைப் படத்தில் காணலாம். வெளித் தோற்றம் பல்வேறு விதமாக இருந்தாலும் அதன் அடிப்படை அமைப்பும் தத்துவமும் எல்லாவற்றிலும் ஒன்று போலத்தானிருக்கும். அதன் அமைப்பு வருமாறு: கருவியில் பெட்டிபோன்ற ஒரு சிறிய அமைப்பு இருக்கின்றது. பெட்டியின் முன்புறமும் பின்புறமும் ஓரத்தில் உலோகத்தாலான அல்லது கார்பலைான மெல்லிய தகடுகள் வைக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/48&oldid=1395857" இலிருந்து மீள்விக்கப்பட்டது