பக்கம்:இளைஞர் வானொலி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒலி பெருக்கி

39


இனி, இந்தவகைக் கருவிகளுள் ஒன்றின் அமைப்பினைக் கவனிப்போம். இந்தக் கருவியில் ஒரு மின்காந்தமும் அதன் அருகில் ஒரு மெல்லிய இரும்புத் தகடும் இருக்கின்றன. தொலைபேசியிலும் இந்த அமைப்பே உள்ளது. நம்முடைய வீட்டுத் தொலைபேசியின் கேட்கும் பகுதியைப் பிரித்துப் பார்த்தால் இந்த உறுப்புக்களிருப்பதைக் காணலாம். இந்தக் காந்தத்தின் கவர்ச்சித்திறன் இக் கருவியின் உள்ளே நுழையும் மின்னொட்டத்தால் பாதிக்கப்பெறுகின்றது. மின்னோட்டத்தில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்கவாறு காந்தம் கவர்ச்சித்திறனை அடைந்து தன் அருகிலுள்ள இரும்புத் தகட்டை வெவ்வேறு அளவுகளில் கவருகின்றது. தகடும் அந்தக் கவர்தல்களுக்கு ஏற்றவாறு நெளிந்து அதிர்ந்து ஒலியினை உண்டாக்குகின்றது. மேடையில் பேசுவோர் குரலையும் பாடுவோர் சாரீரத்தையும் இசைக் கருவிகளின் ஒலியையும் சிறிதும் மாறுபாடின்றி அப்படியே கேட்கின்றோம். நம்முடைய வானொலிப் பெட்டியிலுள்ள ஒலி பெருக்கியில் உலோகத் தகடு ஒரு பெரிய உறுதியான காகிதத்தால் செய்யப் பெற்ற கூம்பு (cone) ஒன்றுடன் இணைக்கப் பெற் றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/47&oldid=1395856" இலிருந்து மீள்விக்கப்பட்டது