இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அய்யன் திருவள்ளுவர்
தோன்றி...
புலவர்கள்
நெய்தளித்த
‘நூல்’ புடவைகளை
உடுத்தி -
உலகெலாம்
உலா வந்த
பூந்தமிழ் அன்னை...
வேட்டியும்
சட்டையும்
மேல் துண்டும்
அணிந்து.. -
அழகுமிகு காஞ்சியில்
ஆண் மகனாய்
அவதரித்தாள்!
அந்நாள் வரை
அனைவர்க்கும்
அன்னையா யிருந்தவள்...
ஆடவனாய்ப் பிறந்ததால்.
அனைவர்க்கும்
‘அண்ணா’ ஆனாள்!
அண்ணாவாகப் பிறந்த
அருந்தமிழுக்கு
அஞ்சலி செய்வதால்...
இன்னூல்
‘தமிழஞ்சலி’
எனும்
இடுகுறிப் பெயரை
ஏற்று இலங்குகிறது.
அடியேன் - அறிஞர் பெருந்தகை
அண்ணாவால் ஆதரிக்கப் பெற்றவன்
என் படவுலகப்