12
கன்பூசியஸின்
யானால், அவன் இதயம் இருக்கிறதே துன்பம் அது துய்க்கும் நட்பு இதயமாகும்.
நேர்மையானவர்களிடம் வைக்கும் நட்பு. உண்மையானவர்களிடம் கொள்ளும் நட்பு, எதையும் பொறுமையாக, கூர்ந்து நோக்குபவர்களாக உள்ள சுபாவமுடையோர் நட்பு என்றும் நன்மையையே தரும்!
தானென்ற அகந்தையுடன் தான்தோன்றியாகத் திரிபவன் நட்பு, ஆட்சி செய்யும் அதிகாரத் தோரணையர் நட்பு; 'நா' அடக்கம் இல்லாதவரின் நட்பு, இந்த சுபாவமுடையோர் நட்பு என்றும் நாசமே தரும்.
சின்னச்சின்ன நன்மைகளைப் பெறுவதற்காக, முயற்சியில் பெரிய நன்மைகளைப் பெறும் வாய்ப்பை நழுவ விட்டு விடாதே!
முகநகப் பழகாதே! அகநகப் பழகும்போது, அந்த நண்பனை அன்புடன் கண்டிக்கத் தயங்காதே! உனது கண்டிப்புக்கு அவன் இணங்காவிட்டால் அவனை விட்டு அகன்று விடு அதற்காக, நீ பழிபாவங்களுக்கு ஆளாகாதே.
பிறக்கும் போது எல்லாரும் நல்லவர்களே அவர்களுக்கு உலகமே இன்னதென்று தெரியாது. ஆனால், அப்படிப்பட்டவர்கள் நீண்ட நாட்களுக்கு அவ்வாறு இருக்க மாட்டார்கள்! பிறக்கும்போது பிறக்கும் குணம் போகப்போக மாறும்.
இந்த உலகம் மூன்று. விஷயங்களில் நல்லதாகும்; அவை: ஆசாரங்களைப் பற்றிய ஆய்வில், சங்கீத ஆய்வில் பிறரைப் பற்றி நல்லது பேசுவதால் உண்டாகும் மகிழ்ச்சியில்.
நல்ல நட்பால் உண்டாகக் கூடிய மகிழ்ச்சியின் தீமைகள்: இன்பங்களையும் சுகபோகங்களையும் அளவுக்கு மீறி அனுபவிப்பது; சோம்பேறித் தனத்தால் உருவாகும்