பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


களைச் செய்தவர்களையும் குறிப்பிடுவது நல்லதல்ல என்பதை எண்ணியே அவர் அதை எழுதாமல் விட்டு வட்டார்.

அறிவின் நாயகரான அய்யன் திருவள்ளுவர் எண்ணியத் தமிழ்ச் சமுதாயம், ஏன் ஒரே உலகச் சமுதாயம், அவர் எழுதிய 1330 குறட்பாக்களிலும், அது எப்படி இருக்க வேண்டும் - எவ்வாறு இயங்க வேண்டும் என்பதையும் ஒவியங்களாக வழங்கியுள்ளார்.

குழந்தை வளர்ப்பு முதல் - குடியாட்சித் தத்துவங்கள் வரை, காதல் முதல்- சாதல் வரை, தொழுதல் முதல்-தேற்றுதல் வரை, அவர் குறட்பாக்களிலே தோற்றமளிப்பதை நம்மால் காண முடிகின்றது.

'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்தப் பையடா, -'தோலெலும்பு செந்நீரும் - வெண்ணிரும் நாறும் ஊத்தைத் தேகம்' என்று குறிப்பிட்டு மனித சமுதாய ஊற்றிலே நஞ்சைக் கலக்காத அவரின் நயத்தகு நாகரிகத்திற்குத் தமிழ்ச் சமுதாயம் என்றும் நன்றிக்காட்டத் தயங்காது!

அய்யன் திருவள்ளுவரை அடையாளம் கண்டு கொள்ள - பலர், பல வண்ணக் கண்ணாடிகளால் நோக்கினர்!

மனோரஞ்சித மலர் போல-நினைத்தவரது மனநிலைக்கேற்ப, மணத்தை விரவி- குறட்பாக்களை எழுதியுள்ளார் அவர்.

அதனால், சிலர் அவரை சைவர் என்றனர்! கொட்டை கட்டினர்! பட்டை தீட்டினர்! பூணுாலைப் போட்டுப் பூரித்து மகிழ்ந்தனர்!

மற்றொருவர் ஜைனர் என்றார்! ஆதிபகவனுக்கு விளக்கம் தந்தார்! 'மலர்மிசை ஏகினான்' என்ற அவரது வியன்மிகு சொற்றொடர்க்கு, மத அற்புதத்தைக் கொண்டு கூட்டித்தத்துவம் பேசிப் பார்த்தார்.

வேறொருவர், அவரை வைணவர் என்றார்! அதற்காக அவரது 'தாமரைக் கண்ணான் உலகு' என்ற குறளின் அடிகளிலே தெண்டனிட்டார்.

'வாலறிவன்' என்ற அவரது குறட்பா சொல்லுக்கு, வாலுடைய அனுமாரை ஒவியம் தீட்டி, தனது வீட்டிலே

45