பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



யார் குற்றம்?

தமிழ் நூல்களில் புலவர்கள் பாராட்டிய மன்னர்களும் செல்வர்களும் பலர். அவர்களுக்குள்ளே முடியுடை மன்னர்கள் புலவர்களை ஆதரித்ததும், தம்மிடம் வந்த இரவலர்களுக்கு வேண்டிய அளவு பொருள் அளித்துப் பாதுகாத்ததும் அருமையான செயல்கள் அல்ல. அவ்வாறு செய்வதற்கு அவர்களிடம் நிரம்பின செல்வம் இருந்தது. ஆனால் சில சிற்றரசர்களும் செல்வர்களும் தங்களை நாடி வந்தவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் அளித்து வந்தனர். பறவை, கொடி ஆகியவற்றினிடங்கூட அவர்களுடைய கருணை சென்றது. அப்படி வாழ்ந்த வள்ளல்களுக்குள் சிறந்தவர்களென்று ஏழு பேரைப் புலவர்கள் பாராட்டியிருக்கிருர்கள்.

பல புலவர்கள் இந்த ஏழு வள்ளல்களை ஒருங்கு சேர்த்துச் சொல்லிருக்கிறார்கள். இந்த ஏழு பேர்களில் நள்ளி என்பவன் ஒருவன். அவன் மலை நிரம்பிய கண்டீரம் என்னும் இடத்தில் வாழ்ந்த சிற்றரசன். தோட்டி என்ற மலை அவனுக்கு உரியதாக இருந்தது. புலவர்களுக்குக் கணக்கில்லாமல் ஈயும் கொடையாளன் அவன். இசைபாடும் பாணர்களுக்குப் பல வகையில் அன்பு செய்து அவர்களுடைய இன்னிசையிலே மூழ்கித் திளைப் பவன். அவ்வாறு பலகாலும் இசைவிருந்தை நுகர்ந்ததளுல் அவனுக்கு இசையின் நுணுக்கங்களெல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தன.

ஒரு சமயம் நள்ளியைத் தேடிக்கொண்டு புகழ் பெற்ற பாணன் ஒருவன் வந்தான். அவன் இனிமை யாத யாழ் வாசிப்பதில் வல்லவன். அவனுடைய