பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


யெல்லாம் நாங்கள் படகின் இருப்புச் சட்டங்களிலே பிணைத்து, கயிறுகளை எங்கள் கைகளில் பிடித்திருந்தோம். ஆகவே பிடித்திருக்க வலு உள்ளவரை நாங்கள் படகி லிருந்து விலக்கி எறியப்பட மாட்டோம். ஆனால் தண்ணீருக்கு மேலே தலைதூக்கி மிதப்பது கஷ்டமாகயிருந்தது. பலமுறைகள் அவரும் நானும் படகின் புறங்களிலே சாடி, எறியப்பட்டோம்; அப்புறம் அலகித் தள்ளுண்டோம், எல்லாவற்றையும் விட மிக மோசமான நிலைமை தலைச் சுற்றல் ஏற்பட்டதுதான். செவிடானோம்; குருடுற்றோம். காதுகளில் நீர் நிறைந்தது. வாயோ நிறைய நிறையத் தண்ணீரை விழுங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலைமை வெகுநேரம் நீடித்தது. சுமார் ஏழு மணி நேரம். பிறகு சட்டெனத் திசை மாறிய காற்று கரை நோக்கியடித்தது. நாங்கள் கரைக்கு இழுத்துச் செல்லப் பட்டோம் வேகமாக.

'பிடித்துக் கொள்ளுங்கள்!' என்று உற்சாகமாகக் கத்தினேன் நான்.

தந்தை பதிலுக்கு என்னவோ கத்தினார். ஒரே ஒரு வார்த்தையைத்தான் நான் கேட்டேன்.

...மோதி...!

பாறைகளை நினைத்துச் சொல்லி யிருப்பார்; அவை இன்னும் தொலை தூரத்திற்கு அப்பால்தானே உள்ளன என்று நான் அவர் பேச்சில் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் என்னைவிட அவருக்கு அதிகம் தெரியும். ஈவு இரக்கமற்ற தன்மையிலே மோதி அலைக்கழிக்கும் படகோடு படகாய் நத்தைகளைப் போல் ஒட்டிக் கொண்டிருந்த நாங்கள் விறைத்துப்போன நிலையில் செயலற்றவர்களாய் ஜலமலைகளினூடெல்லாம் இழுபட்டுச் சென்ருேம், இதுவும் ரொம்ப நேரம் நடைபெற்றது. எனினும் இறுதியில் கரையின் இருண்ட பார்வையில் படலாயின. அதற்குப்