உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12

கான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுக்காக நான் சிறிது துயரப்படுகிறேன் என்றுகூடச் சொல்லலாம். எனக்குப் புரிகிற வரையில், இந்த அம்மாள் தாங்கள் டிரெளசரைப் பாழ்படுத்தி விட்டதாய் எண்ணுவதாகத் தெரிகிறது. உங்கள் கையிருப்பான கடைசிக் கால்சட்டையை நான் எடுத்துக் கொண்டது போலவும், உங்களுக்காக நீங்கள் வேறொரு சட்டை வாங்க இயலாதவர்கள் போலவும் இந்த அம்மாள் எண்ணுவதாகத் தோன்றுகிறது...'

        இதுவரை அமைதியாகக் கேட்டு நின்ற அமெரிக்கன் குறிப்பிட்டான்: சசி தம்பி, போலீஸ்காரனைக் கூப்பிட வேண்டியது தான் என்றே நான் நினைக்கிறேன்.'
       'நிஜமாகவா? எதற்காகவோ?’ என்று வியப்புடன், வினவினான் பெப்பி.
       'உன்னை ஜெயிலுக்கு அழைத்துப் போக...
        பெப்பிக்கு அளவற்ற வேதனை ஏற்பட்டது. உண்மையில் அவன் அழத்தயாராகி விட்டான். எனினும் கண்ணீரை அடக்கிக் கொண்டு, கண்யம் குன்றாத முறையிலே பேசினான்.
        வலின்யார், மக்களை ஜெயிலுக்கு அனுப்புவது உமக்கு ஆனந்தம் அளிக்கிற தென்றால், அது உமது சொந்த விஷயம். என்னிடம் பல கால்சட்டைகளிருந்து, உம்மிடம் ஒன்றுகூட இல்லாதிருக்குமானால், நான் உம்மைப் போல் நடந்து கொள்ள மாட்டேன். உமக்கு இரண்டு கால்சட்டைகள் கொடுத்துவிடுவேன். ஒருவேளை மூன்று கூடக் கொடுத்தாலும் கொடுக்கலாம். ஒரே சமயத்தில் ஒருவன் மூன்று கால்சட்டைகளை அணிந்து கொள்ள முடியாது என்பதும் உண்மை தான். முக்கியமாக கோடை காலத்தில்...'
       அமெரிக்கனுக்குச் சிரிப்பு பொங்கி வந்தது. பணக்காரர்கள் கூடச் சில சமயங்களில் தமாஷ்களை உணர்ந்துவிடுகிறார்கள். ஆகவே அவன் பெப்பிக்கு சாக்கலெட்